தியானம் (மாசி 27, 2026)
ஆவிக்குரிய யுத்தம்!
மத்தேயு 7:25
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை;
ஒரு வாலிபனானவன், தன் வாழ்வில் தனக்கேற்பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், நெருகங்கள் மத்தியிலும், தன் தகப்பனானவரோடு இருந்து, அவருடைய பண்ணையிலே வேலை செய்து வந்தான். அவனுடைய தகப்பனானவர் செய்யும் எல்லாக் காரியங்களையும் அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தன் தகப்பனானவருக்கு தான் உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலையுடையவ னாக பல ஆண்டுகள் பிரயாசம்பட் டான். அதன் நன்மைகளை பின்பட்ட காலங்களிலே அறிந்து கொண்டான். இப்போது பண்ணையானது அந்த ஊராரின் கண்கை கவர்ந்ததால், பலர் அங்கு வந்து, வேலை செய்யவும், பிரயாசப்படவும், நாங்களும் அந்த பண்ணையிலே வேலை செய்கின்றோம் என்றும், அது பெரிய பண்ணை என்று பெருமையோடு கூறிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் அந்த பண்ணையை அமைப்பதைக் குறித்தோ, அதிலே உண்டாகும் உபத்திரவங்களையோ அறியாதிருந்தார்கள். ஆனால், வேறு மனிதர்களுடைய பிரயாசத்திலே மகிழ்கின்றவர்களாக காணப்பட்டார்கள். ஆனால், மறுபடியும் இந்த பண்ணையானது நஷ;டமடைய ஆரம்பிக்கும் போது, அவர்கள் யாவரும் அங்கு நிலைநிற்பதில்லை. பிரியமானவர்களே, இந்த சம்பத்தை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் சொந்த குடும்பங்களை இதற்கு ஒப்பனையாக வைத்து தியானியுங்கள். சபை ஊழியங்களை மையமாக வைத்து தியானம் செய்யுங்கள். நெருக்கங்கள் கஷ்டங்களை கண்டு ஓடிப் போகின்றவர்களாக இருக்காமல், ஆண்டவர் இயேசுவின் நல்ல போர்ச்சேவகர்களைப் போல நிலைத்திருந்து, ஆவிக்குரிய யுத்தத்தை நடப்பிக்கின்றவர்களாக இருங்கள். ஒருவன் தன் சொந்த வீட்டைவிட்டு அதிசீக்கிரமாக விலகிப் போகின்றவளாக இருதால், இன்னுமொருவனின் வாடகைவீட்டை விட்டு அகன்று போவது அதிக நிச்சயமல்லவோ. ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளை தியானியுங்கள்: 'நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவை களின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை. ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.' எனவே, போராட்டங்கள் மத்தியிலே ஆவிக்குரிய யுத்தத்தை நடப்பியுங்கள்.
ஜெபம்:
அன்பின் தேவனே, நெருங்கங்கள் துன்பங்கள் மத்தியிலே நான் மாம்சத்திலே யுத்தம் செய்யாமல், உம்முடைய வார்த்தையிலே நிலைத் திருந்து வெற்றி கொள்ள எனக்கு ஞானமுள்ள இருயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 15:7