தியானம் (மாசி 23, 2026)
உபத்திரவங்களில் மேன்மைபாராட்டுதல்
பிலிப்பியர் 1:29
ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர்நிமித்த மாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
இந்த உலகத்திலே தேவ பக்தியாய் நடப்பதையும், அதே உலகத்தினால் உண்டாகும் உபத்திரவத்தையும் பிரித்து விட முடியாது. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள என்று 2 தீமோத்தேயு 3:12ல் வாசிக்கின்றோம். இன்று செழிப்பின் உபதேசங்களை பின்பற்றுகின்றவர்கள், பொருளாசையினால் உண்டாயிருக்கின்ற மயக்கத்தினாலே, சத்தியத்திற்கு விரோதமாக பிரசங்கித்து வருகின்றார்கள். இந்த உலகம் உங் களை பகைத்தால், ஆச்சரியப்படா திருங்கள். அதன் மறுபக்கம் என்ன? இந்த உலகம் உங்களை ஏற்றுக் கொண்டால் நீங்கள் அதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த உலகத்தின் போக்கும், பரலோக வாசிகளின் போக்கும் ஒருபோதும் ஒத்திருக்க முடியாது. 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங் களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல வென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொ ண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் நன்மை செய்து பாடநுபவித்தும், இன்னும் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலே நிலைத்திருந்தால், தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் பாடுகள் மத்தியிலே கிறிஸ்தவனாக வாழ்வது மனித பெலத்தினால் சாத்தியமாகாது. உங்களுக்குள் வாழும் தேவ ஆவியானவர்தாமே உங்கள் பக்கமாக நின்று உங்களை பெலப்படுத்த துகின்றார். எனவே, கிறிஸ்துவினிமித்தம் உங்களுக்கு பாடுபடும்படி அருளப்பட்டிருப்பதால், தேவனுக்கு நன்றியை செலுத்துங்கள். பரலோக த்திலே உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும். எனவே, கிறிஸ்தவ னாக இருப்பதினால் உண்டாகும் உபத்திரவங்களிலே தேவ கிருபையை மேன்மைபாராட்டுங்கள்.
ஜெபம்:
நித்திய வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, இந்த உலகத் திற்கு ஒத்த வேஷம் தரியாமல், நாளுக்கு நாள் உள்ளான மனதின் மறுரூபமாக்கப்படும்படி எனக்கு உணர்வுள்ள இருயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென். இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 16:1-4