புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2026)

கர்த்தருக்கு பாத்திரராயிருங்கள்

கொலோசெயர் 1:10

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,


ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலே, விசுவாசத்தின் போராட்டம் ஓய்ந்து போய்வதில்லை. எனக்கு போராட்டம் இல்லை என்று எண்ணிக் கொள்கின்றவன், தான் எங்கே நிற்கின்றேன் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வது நல்லது. விசுவாச மார்க்கத்தாராகிய யாவரும், எல்லா போராட்டங்களின் மத்தியிலும், தேவன் அழைத்த அழைப்புக்கு பாத்திரராகிய நடந்து கொள்ள வேண்டும். அதைக் குறித்து, தேவ ஊழியராகிய பவுல் எபேசு சபைக்கு எழுத்தும் போது: ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல் லுகிற புத்தியென்னவெனில், நீங் கள் அழைக்கப்பட்ட அழைப்புக் குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடை யவர்களாய், அன்பினால் ஒருவ ரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்று அறிவுரை கூறியிருக்கின்றார். எனவே ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே நிலை யாய் நிற்க வேண்டும். தனக்குள் தானே நிலைதவறி போகின்றவனாக இருக்காமல். ஊரோடு ஒத்ததோட வேண்டும் என்று சந்தர்ப்பத்திற்கேற்ற பிரகாரமாக வேஷங்களை மாற்றிக் கொள்கின்றவர்களாக இருக்காமல், ஆதியிலே கொண்ட விசுவாசத்திலே அசையாமல் நிலைத்திருக்க வேண்டும். நீதியின் பாதையிலே நடக்கும் போதும், சத்தியத்தை சுத்தமாக பேசும் போதும், நிந்தைகள் அவமானங்கள் உண்டாகலாம். அதனாலே பயந்து பின்னிட்டுப் போகாமல், சுவிசேஷத்தின் விசுவாசத்திலே நிலைத்திருக்க வேண்டும். 'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள வேண்டும்' (கொலோசேயர் 1:10). தூய ஆவியாகிய துணையாளர் கூட இருந்து வழிநடத்திச் செல்வாராக.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, விசுவாசத்தின் நல்ல போராட் டத்தை போராடி நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும் மன உறுதியை எனக்கு தந்து, என்னை உம்முடைய வார்த்தையின் வழியிலேந நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:27