தியானம் (மாசி 15, 2026)
காரியத்தின் கடைத்தொகை
பிரசங்கி 12:13
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக் குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
வாழந்தென்ன மரித்தென்ன? வாழந்து என்னத்தைக் கண்டோம் எல்லாம் ஒன்றுதான் என்று சிலர் தங்கள் மனவிரக்தியில் கூறிக் கொள்கின் றார்கள். மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லு கிறான். சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தி னாலும் அவனுக்குப் பலன் என்ன? ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது என்று பிரசங்கி கூறியதின் கருப்பொருளை அறியாமல், குடித்து வெறித்து சுகபோகமாக வாழ்பவர்களும், எல்லாம் மாயை என்று சொல்லிக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட மலக்கிலேசத்தோடு செத்து போனால் போதும் என்று கூறி வது ஒரு கிறிஸ்தனுக்கு உரியத ல்ல. வாழ்க்கையிலே சவால்கள், போராட்டங்கள், சோதனைகள், வேதனைகள் ஒன்றின் பின் ஒன்றாக வரலாம். அவைகளின் மத்தியிலே கிறிஸ்துவின் சாட்சிகளாக நாம் வாழ்ந்து, ஜெயம் கொள்ளும்படிக்கு, தேவ ஆவியானவர்தாமே நமக்குள்ளே வாசம் செய்கின்றார். தேவ ஊழியராகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும் போது, தான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி என்று தன் விரக்கதியில் கூறவில்லை. நான் வாழ்ந்தால் கிறிஸ்துவின் பணியிலே இருப்பேன். ஆதனால், பரலோகத்திலே மிகுந்த பலனுக்கு ஏதுவான வைகளை நான் செய்வேன். அப்படியாக நான் சரீரத்திலே இருப்பது உங்களுக்கும் நன்மையாயிருக்கும். ஆனால், சரீரத்தைவிட்டு கடந்து சென்று கிறிஸ்துவோடு இருப்பது எனக்கு அதிக நன்மையாயிருக்கும். இவை இரண்டிலும், என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே, நான் தேவனுடைய சித்தத்தை செய்வதையே நாடுகின்றேன் என்பதை பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்திலே வலியுறுத்திக் கூறியிருக்கின்றார். எனவே, எங்களுடைய வாயின் அறிக்கையை குறித்து நாங்கள் எச்சரிக் கையுள்ளவர்களாக இருந்து, எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கே ற்றவைகளை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அப்படியாக நாங்கள் தேவ சித்தத்தை செய்யும் போது, இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் பயமானது எங்களைவிட்டு அகன்று போகும். முhறாக, அந்த நாளைக் குறித்து சந்தோஷம் மனதிலே உண்டாகும். ஆனால், அதுவும் தேவனுடைய நேரத்திலே நடக்கும் என்பதை நாம் அறிக்கை செய்ய வேண்டும்.
ஜெபம்:
அன்பின் தேவனே, உமக்கு விரோதமான காரியங்களை செய்வதற்கு வரும் தடைகளை கண்டு பயப்படாமல், உமக்கு பயந்து உமது வழியிலே நடக்கும் உண்மையுள்ள விசுவாசியாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:24