தியானம் (மாசி 14, 2026)
நித்தியத்தைக் குறித்த நிச்சயம்
பிலிப்பியர் 1:21
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்வதை உண்மையிலேயே சந்தோஷத்தோடே ஏற்றுக் கொள்கின்றவர்கள் எத்தனை பேர்? சில சுகமாக செழிப்பாக வாழும் போது மரணத்திற்கு அஞ்சாதவன், உலகத்திலே பிறந்தவன் எவனும்; ஒருநாள் மரிக்க வேண்டும் என்று கூறிக்க கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்விலே, தங்கள் சரீரத்திலே ஏற்படும், சிறிதான சரீர நோய்களை கூட ஏற்றுக் கொள்ள மனதில்லாத வர்களாக இருப்பார்கள். துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கையிலே சூழ்ந்து கொள்ளும் போது, நான் மற்றவர்க ளுக்கு தீங்கு நினைக்காதவன்! ஏன் எனக்கு இப்படி நேரிட வேண்டும்? தேவன் எங்கே? என்று சொல்லிக் கொள் வோரும் உண்டு. ஆனால், எங்களு க்கு முன்னோடிகளாக இருந்து, இன் பத்திலும், துன்பத்திலும், உயர்விலும் தாழ்விலும், வெற்றி வாழ்க்கை வாழ்ந்து இந்த உலகத்தை விட்டு, அகற்றப்பட்ட மேகம் போன்ற திரளான சாட்சிகளின் வாழ்க் கையை நோக்கிப் பாருங்கள். இந்த உலகத்திலே தங்களுக்கு ஏற்படும் மரணம், தங்களுடைய பெரிதான முதலீடு என்று கருதி வாழ்ந்தார்கள். அப்படியாக சிந்திப்பதற்கு அவர்கள் என்னத்தை கண்டு கொண்டார்கள். அவர்கள் தங்கள் விசுவாச கண்களால், இனிவரும் மேன்மையை அறிந்துணர்ந்தார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு தாமே, தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று எபிரெயர் 12ம் அதிகாரம் 2ம் வசனத்திலே வாசிக்கின்றோம். அதே பிரகாரமாக, தேவ ஊழியராகிய பவுலும், தன்னுடைய வாழ்க்கையைக் குறித்து பிலிப்பி சபைக்கு எழுதும் போது, 'கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.' என்று கூறியிருக்கின்றார். இந்த உலகத்திலே தத்துவம் பேசுகின்ற வர்கள் அநேகர் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். அவர் பெரும் பெரும் வார்த்தைகளை பேசிக் கொள்கின்றார்கள். ஆனால் தாங்கள் போகும் இடம் இன்தென்று அறியாதிருக்கின்றார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசுவை அறிந்தவர்கள், இந்த உலகத்திலே வாழும் போது, தேவ ராஜ்யத்திலே மனப்பூர்வமாக தங்களைத் தாங்களே முதலீடு செய்து கொள்கின்றார்கள். ஆதலால், அவர்கள் சென்றடையும் இடத்தை அறிந்திருக்கின்றார்கள். அதனால், சாவைக் குறித்து கலக்கமடையாமல், விசுவாசத்திலே நிலைகொண்டு, மன உறுதியோடு வாழ்கின்றார்கள்.
ஜெபம்:
நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, அதை உணர்ந்து, அநித்தியமானவைகளிலே என் மனதை தக்க வைத்துக் கொள்ளாமல், நித்தியமானவைளை தேட எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2