தியானம் (மாசி 11, 2026)
ஜெபமும் வேண்டுதலும்
1 தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
அன்றுமட்டுமல்ல, இன்றும் பல நாடுகளிலே சிலர் சுவிசேஷத்திற்காக அரும்பாடுபட்டு வருகின்றார்கள். சிலர் நிந்தைகள் அவமானகங்கள் மத்தியிலே ஊழியம் செய்து வருகின்றார்கள். வேறு சிலர், சரீரத்திலே துன்புறுத்த பட்டு, பொருட் சேதம் அடைகின்றார்கள். இன்னும் சிலர், தங்கள் பிராணனை அற்பமாக எண்ணி, கிறிஸ்துவின் நாமத்தின் நிமி த்தம், சிறையிலே காவலில் போட்பபட்டுள்ளார்கள். அதுமட்டுல்வ, உயி ர்த்தியாகமும் செய்ய ஆயத்தமு ள்ளவர்களாக இருக்கின்றார்கள். இன்றைய நாளிலே உங்களு டைய பிரச்சனைகள் என்ன? எத ற்காக உங்கள் மத்தியிலே கலகங்களும் பிரிவினைகளும் உண்டாகி ன்றது? அப்படியாக கருத்து வேற்றுமைகளும், முரண்பாடுகளும் ஏற்படும் போது, நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? மனம் மாறாமல் இடம் மாறுவதில் பலனில்லை என்பதை ஒவ்வொருவரும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். மனித பலத்தில் உறுதியாய் இருக்கும் குழுக்களின் பக்கமாய் நிற்பது மாம்சத்திற்குரிய செயலாக இருக்கும். பிலிப்பிய சபையோர், பவுலுடைய கஷ;டங்களிலே பொருள் உதவியை அனுப்பி வைத்தது மாத்திரமல்ல, அதைவிட மேலாக, பவுலின் விடுதலைக்காக தேவனிடத்திலே வேண்டுதல் செய்து வருகின்றார்கள் என்பதை, தேவ ஊழியராகிய பவுல் தன்னுடைய நிரூபத்திலே குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அவர் எபேசு சபையோருக்கு ஆவிக்குரிய போராட்டங்கள் குறித்து எழுதும் போது, 'எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுத லோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத் திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.' என்று தேவ ஆலோசனையை கூறியிருக்கி ன்றார். எனவே, தனிப்பட்ட வாழ்க்கையிலே, குடும்பங்களிலே, சபைக ளிலே குழப்பங்கள் ஏற்படும் போது கலக்காரராக மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நாம் எப்பொழுதும், உயர்விலும், தாழ்விலும், சோதனையிலும் வேதனையிலும், தேவனிடத்தில் ஜெபம் செய்வதற்கும், மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். ஊக்கமாக ஜெபமும், வேண்டுதலும் ஒரு விசுவாசியின் சுபா மாக மாறவேண்டும்.
ஜெபம்:
அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிக்கும் தேவனே, நான் சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, அழியாமையை தேடுகின்ற உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 5:12