புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2026)

கிறிஸ்துவின் சாட்சிகள்!

அப்போஸ்தலர் 23:11

நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும்


தேவ ஊழியராகிய பவுல், ரேமாபுரியிலிருந்த சிறையிலிருந்து பிலிப்பியருக்கு எழுதின நிரூபத்தைக் குறித்து இந்த வருட ஆரம்பத்திலிருந்து தியானித்து வருகின்றோம். அவர் ரோமபுரியிலுள்ள சிறைக்கு சென்ற விபரமாவது. அப்போஸ்தலராகிய பவுல் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த இஸ்ரவேலனாக இருந்தார். அந்த நாட்களிலே யூதேயா முழுவதும் ரோம ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஒருவன் ரோமருடைய குடியுரிமையை பெற்றுக் கொள்ளுதற்னான ஏராளமான பணத்தை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், புவுலோ, பிறப் பினாலே ரோம குடியுரிமையை பெற் றிருந்தார். பவுல், கிறிஸ்துவின் இரடசிப்பின் நற்செய்தியை எருசலேமிலேயுள்ள யூதர்களுக்கு பிரசங்கிங்கும்படி திரும்பி வந்திருந்தார். அங்கிருந்த யூதர்களில் சிலர் ஜனங்களை பவுலுக்கு எதிராக ஏவிவிட்டு, எருசலேமிலே கலகத்தை உண்டுபண்ணினார்கள். அவர்கள் அவனைக் கொலை செய்ய எத்தனிக்கின்றார்கள் என்பது சேனாபதிக்குச் செய்திவந்த போது, பவுலை, இரண்டு சங்கிலிகளினாலே கட்டி காவலிலே வைத்தார் கள். அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். பின்பு அவர்கள் புவுலை விசாரணை செய்தார்கள். பவுலிடத்தில் குற்றம் ஏதும் காண ப்படாதபடிகயினாலே அவரை விடுவிக்க மனதாயிருந்தார்கள். ஆனாலும், மதத்தலைவர்கள் அவரை கொலை செய்யும்படி வெகுவாய் சதி செய்தார்கள். பவுல், ரோம குடியுரிமையுடையவராக இருந்ததால், ரோம ராஜ்யத்தின் சக்கரவத்தியாகிய இராயருக்கு மேன்முறையீடு செய்தார். அதன்படிக்கு அவர் ரோமபுரிக்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு காவல் காத்து வந்த ரோம சேவகர்களுக்கு கிறிஸ்துவின் நற்n சய்தி யை பிரசங்கித்து வந்தார். நாளடைவிலே, அவருடைய சிறையிருப்பு, கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தமாக உண்டானது என்று இராயருடைய அரண்மனையிலுள்ளவர்களுக்கு வெளியரங்கமாகிற்று. கர்த்தர் கூறிய பிரகாரமாக, பவுல், ரோமாபுரியிலும் கர்த்தரை குறித்து சாட்சி கொடுத்தார். சிறையாக இருந்தால் என்ன, சுதந்ததிரமாக இருந்தால் என்ன, அவருடைய வாழ்விலே கிறிஸ்துவுக்கு சாட்சி பகர்வதையே நோக்கமாக கொண்டிருந்தார். அது போலவே நாமும் கிறிஸ்துவின் சாட்சிகளாய் வாழ்வதையே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

ஜெபம்:

என்னை தெரிந்து கொண்ட அன்பின் பரலோக பிதாவே, எந்த சூழ்நிலையிலும் நான் அழைப்பின் நோக்கத்தை மறந்து போகாமல், உண்மையும் உத்தமமுமான சாட்சியாக திகழும்படி எனக்கு பெலன் தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:12-14