புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2026)

'நியமித்திருக்கிற ஓட்டத்தில்'

எபிரெயர் 12:1

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;


'அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' என்று 2ம் தீமோத்தேயு 3ம் அதிகாரம் 12ம் வசனத்திலே வாசிக்கின்றோம். இந்த துன்பங்கள் சரீரப்பிரகாரமாகவோ, கல்விகற்கும் நிலையங்களிலே, வேலை செய்யும் இடங்களிலும் செய்முறைகளினாலோ, சொந்த பந்தங்கள் மத்தியிலே வீண் வார்த்தைப் பிரயோகங்களினாலே, உண்டாகலாம். ஒரு வேளை அந்த துன்பமானது நீங்கள் சென்றுவரும் சபையோரால் உண்டா கினாலும் ஆச்சரியப்படாதிருங்கள். இப் படியாக துன்பங்கள் நேரிடும் போது, அந்த துன்பங்களை விசுவாசிகளும், மற்றய மனிதர்களும் வௌ;வேறான போக்கிலே நோக்கிக் கொள்கின்றார் கள். விசுவாசமார்கத்தார் என்று பெயர் பெற்ற சிலர், அவபக்தியாய் நடந்து அவமானங்களை தங்களுடையதாக்கிக் கொள்வதோடு, தேவ பக்தியாய் நடக்கின்றவர்களுக்கு பல துன்பங்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இன்றைய நாட்களிலும், சில இடங்களிலே, கிறிஸ்துவின் நிமித்தம், சிலர் சரீரத்திலே பாடுகளை அனுபவிக்கின்றார்கள். சிலர் சிறைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சிலர் அவர்களை குறித்து ஞான மற்றவர்கள் என்று கூறிக் கொள்கின்றார்கள். வேறு சிலர், தங்களை எதிர்கின் றவர்களுக்கு ஏற்றபடி கிறிஸ்துவின் உபதேசத்தை மாற்றி, மத நல்லிண கங்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இது தேவ ஞானம் அல்ல, லௌகீக ஞானம். வஞ்சிக்கப்பட்டுப்போன இன்னும் சிலர், சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்க முயற்சி செய்கின்றா ர்கள். அப்படிப்பட்ட மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியா யத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத் தப்பட்டிருக்கிறது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. மேலான ராஜ்யத்திகென்று அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, அநேகருக்கு வேதம் கூறுகின்ற பிரகாரமாக, 'பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகி றதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்க வில்லையே.' அதாவது, இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டும் என்கின்ற நிர்பர்ந்தம் அநேகருக்கில்லை. அப்படியிருந்தும், நீங்கள் கிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு வெட்கமடைந்தால், பாடுகள் வரும் போதும் எங்கே நிற்பீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். எனவே, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

அன்பின் தேவனே, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிற இயேசுவைப் போல இனிவரும் மேன்மையை உணர்ந்து முன்னேற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 1:17-18