புதிய நாளுக்குள்..

தியானம் (தை 31, 2026)

நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்

மத்தேயு 7:11

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப் பது அதிக நிச்சயம் அல்லவா?


பிதவாகிய தேவன்தாமே நம்மேல் பாராட்டின அன்பு நாம் அடைந்து இரட்சிப்புக்கு அடிதளமாக இருக்கின்றது. அந்த அன்பானது பாவங்களை, நாம் நம்முடைய பாவங்களை மூடி மறைக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம் மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். ஆனால், இன்று, வேத வார்த்தைகளுக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் சிலர், தங்கள் பாவ இச்சைக ளிலே விட்டுவிட மனதில்லாமல் இருப்பதால், தங்கள் வழிகளை குறித்து மற்றவர்கள் ஏதும் கூறுவதற்கு முன்னதாகவே, அன்பு இருந்தால் போதும் என்று கூறிக் கொள்வார்கள். 'உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.' என்று ரோமர் 12ம் அதிகாரம் 9ம் வசனத்திலே வாசிக்கின்றோம். தீமையானது பிசாசானவனிடத்திலிருந்து வருகின்றது. நன்மையோ தேவனிடத்திலிருந்து வருகின்றது. விசுவாசிகள் தேவ அன்பை அறியும் அறிவிலும் உணர்விலும் வளரும் போது, அவர்கள் வாழ்விலே மாற்றங்கள் ஏற்படும். தானதர்மங்கள் நல்லது அதைவிட மேலானவைகளும் உண்டு. கிறிஸ்துவிலிருந்த சிந்தையாகிய மனத்தாழ்மையும், கீழ்படிவும் உண்டாக வேண்டும். அவை நீதியின் கனிகளால் வெளிப்படுத்தப்பட வேண்டும். தேவ வார்த்தைக்கு கீழ்படிகின்றதை எப்படி கனிகளால் உறுதிப்படுத்த முடியும். தேவன் நியமித்த அதிகாரங்களுக்கு கீழ்படிகின்றவர்கள், தேவ வார்த் தைக்கு உண்மையாக கீழ்படிகின்றவர்களாக இருப்பார்கள். இன்று அதிக தொலைவிலே இருப்பவர்களுக்கு தானதர்மங்களை செய்கின்றவர்கள் சிலர், தங்கள் அருகில் இருக்கும் உடன் சகோதரரோடு பகை, வைராக்கியம், பிரிவினை, கசப்பு போன்றவற்றை காண்பிக்கின்றார்கள். மன்னிக்கும் மனப்பான்மையிலே பெருகின்றவர்களாக இருப்பார்கள். இப்படியாக, உள்ளான மனிதனிலே வரும் மாற்றங்கள், வெளியரங்க மான கனிகளை அவர்களுக்கு வாழ்க்கையிலே வெளிப்படுத்தும். பிதாவாகிய தேவன் தம்மிடத்தில் வேண்டிக்கொள்பவர்களுக்கு நன்மை யான ஈவுகளை கொடுப்பது அதிக நிச்சயம். எனவே அவரை நோக்கிப் பாருங்கள். நன்மையானவைகளை அவர் உங்களுக்கு தந்தருள்வார்.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, என்னுடைய அன்பு மாயமற்றதாக இருக்கவும், அது கனிகளால் என்னில் வெளிப்படவும் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:10