புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2026)

சத்திய வழியில் நடத்துகின்றவர் நமக்குள்ளே!

2 கொரிந்தியர் 7:1

பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கட வோம்.


அன்று தேவ ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின்; நிழலாய்மாத்திரம் இருந்தது. அந்த நன்மை களின் பொருள் வெளிப்பட காலமான போது, இயேசுகிறிஸ்துவினு டைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். மீட்பராகிய இயேசுவோ, பாவ ங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தினார். பரிசுத்தமாக்கப்படுகிறவர் களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்ப டுத் தியிருக்கிறார். அன்று வரப்போகி ன்ற நன்மைகளின் நிழலாய் பிர மாணங்களை கொடுத்தவர், இன்று நமக்குள்ளே வாசம் பண் ணுகின்றார். 'இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக் குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படி யெனில்: அந்த நாட்களுக்குப்பி ன்பு நான் அவர்களோடே பண் ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவ ர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மன தில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்த ப்படுவதில்லையே.' என்பதை எபிரரெயர் 10ம் அதிகாரத்திலே வாசிக் கின்றோம். இவைகள் நம்முடைய நீதியின் கிரியைகளினாலே உண்டாக வில்லை, மாறாக தேவ கிருபையினாலே இலவமாக உண்டாயிற்று. எப்படி உண்டானது? 'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறி க்கைபண்ணப்படும் என்று வேதம் கூறுகின்றது. ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தினாலே வேறு பிரிக்கப்பட்டிருக்கின்றோம். அதனால் யாவும் முடிந்து விட்டதா? இல்லை விசுவாசிகள், தங்கள் விசுவாசத்தின் கிரியைகளை தேவ பயத்தோடு நடப்பிக்க வேண்டும். அந்தக் கிரியை களை செய்து முடிப்பதற்கு கிருபையின் ஆவி நமக்கு கொடுக்க ப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையோடு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் ஓட என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 10:38-39