புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2026)

தன்னை சீஷன் என்று சொல்லிக் கொள்பவன்

மத்தேயு 28:19

ஆகையால், நீங்கள் புறப்பட் டுப்போய், சகல ஜாதிகளை யும் சீஷராக்கி,


யார் ஆண்டவர் இயேசுவின் ஊழியக்காரன் என்று தன்னை கூறிக் கொள்ள முடியும்? யார் கிறிஸ்து இயேசுவுக்கு சீஷர்களாக இருக்க முடியும்? இன்று பலர் தங்களை ஆண்டவர் இயேசுவின் ஊழியக்காரர் என்றும் சீஷர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றார்கள். நாமும், ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள் என்று நம்மை எண்ணிக் கொள்கின் றோம். இவைகளை குறித்து பரிசுத்த வேதாகமம் கூறவதை சற்று ஆராய்ந்து பார்ப்போம். 'நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண் டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங் கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதக ருமாகிய நானே உங்கள் கால்க ளைக் கழுவினதுண்டானால், நீங்க ளும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களு க்குச் செய்ததுபோல நீங் களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல் லுகிறேன், ஊழியக் காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்ப ப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவை களை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.' 'யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோ தரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் என க்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என க்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.' 'நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், என க்கும் சீஷராயிருப்பீர்கள்.' 'நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழிய க்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல் லுங்கள்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, மனத்தாழ்மையும், கீழ்படியும் இல்லாமல் ஒருவனும் ஆண்டவர் இயே சுவின் சீஷனாக இருக்க முடியாது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்து இயேசுவில் நிலைத்திருந்து கனி கொடுக்கும் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும். கனிகள் வாழ்க்கையிலே வெளிப்பட வேண்டும்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனாகிய கர்த்தாவே, ஆண்டவர் இயேசு வைப் போல மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும் இந்த உலகிலே வாழும்படிக்கு எனக்கு உம்முடைய கிருபையை தந்த என்னை வழிந டத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:23