தியானம் (தை 07, 2026)
கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள்
எபேசியர் 5:10
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
பிலிப்பி சபையோர் மத்தியிலே சமுதாய ஏற்றத் தாழ்வுகள், முறுமுறு ப்புக்ள், பிரிவினைகள், மாம்சத்தின் பெருமைகள் போன்ற குறைவுகள் இருந்தை நாம் பின்வரும் அதிகாரங்களிலே வாசிக்கலாம். அந்த குறைவுகள் அவர்கள் மத்தியிலே இருப்பதை, சிறையிலிருந்த புவல், அவர்களை 'கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள்' என்று தன்னுடைய நிரூபத்திலே குறிப்பிட்டிருக்கின்றார். இது அவர்களுடைய கிரியைகளினாலே உண்டானதோ அல்லது தேவ கிருபையினாலே உண்டானதோ? ஆம்! தேவ கிருபையினாலே ஆண்டவர் இயேசு வின் மேல் கொண்ட விசுவாசத்தி னாலே அது உண்டானது. நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படு வதால், நாம் பாவ செய்யாத முற்றிலும் பரிசுத்தர் என்பது பொருளல்ல. நாம் ஆண்டவராகிய இயேவின் திருஇரத்ததினாலே கிரயத்திற்கு கொள்ளப்பட்டவர்கள். உலகத்தின் போக்கிலிருந்து வேறு பிரிக்கப்பட்டவர்கள் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். அதனால் என்ன? நாம் 'கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள்' என்று அழைக்கப்படுவதினால், இரட்சிப்பு நிறைவேறிற்றோ? அப்படி இரட்சிப்பானது பூரணப்பட்டிருந்தால், அப்போஸ்தலவராகிய பவுல், பிலிப்பி பட் டணத்திலுள்ளவர்களுக்கு, அவர்களுடைய குறைகளை சுட்டிக் காட்டி இந்த நிரூபத்தை எழுத வேண்டும்? பரிசுத்தவான்கள் என்று அழைக்கப் படுகின்றவர்கள், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி அசுத்தமானவைகளை தங்கள் வாழ்விலிருந்து களைந்து போட வேண்டும். 'மேலும், பரிசுத்த வான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொரு ளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல் லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாச மும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனா வது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரம டைவ தில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினிமி த்தமா கக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினைவ ருவ தால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;. அவர்களுக்குப் பங்காளிகளாகா திருங் கள் என்று வேதத்திலே வாசிக்கின்றோம். எனவே, 'கனியற்ற அந்தகா ரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.'
ஜெபம்:
பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறு பிரித்த தேவனே, பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு நான் காத்துக் கொள்ளும்படிக்கு உம்முடைய கிருபையினாலே என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபேசியர் 4:30