புதிய நாளுக்குள்..

தியானம் (தை 05, 2026)

நாம் வேதத்தை ஏன் கற்றுக் கொள்கின்றோம்?

2 தீமோத்தேயு 3:14

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு;


அப்போஸ்தலராகிய பவுல் பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகக ளுக்கு நிருபத்தை எழுதும் போது: 'இயேசுகிறிஸ்துவின் ஊழியக்கார ராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவு க்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும்' எழுதியிரு க்கிறார். பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் வாசிக்கும் போதும், உங் கள் சபையிலே பிரசங்கிக்கப் படும் பிரசங்கங்களை அல்லது வேதப்படிப்புக்களை கேட்கும் போது, உங்கள் மனதிலே எழும் எண் ணங்கள் என்ன? சற்று தரித்திருந்து இதை சிந்தித்துப் பார்ப்பது உங்க ளுக்கு பிரயோஜனமாக இருக்கும். வேதத்தை கற்றுக் கொள்ளும் போது, விசுவாசிகளுடைய மனதிலே தோன்றக்கூடிய சில எண்ணங்கள்: இதை நான் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதெப்படி? இந்த வசனம் அந்த சகோ தரனுக்கு அல்லது இந்த சகோதரிக்கு பதிலடி கொடுப்பதற்கு ஏற்றது. நான் இன்னும் எவ்வளவாய் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல். நித்திய ஜீவன் தரும் இந்த அருமையான வார்த்தைகளுக்காக நான் இன்னும் அதிகமாக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இப்படியாக பற்பல சிந்தனைகள் மனதிலே தோன் றலாம். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டி ருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியை யுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதி யைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது என்று 2 தீமோத்தேயு 3ம்; அதிகாரம் 16ம் 17ம் வசனங்களிலே வாசிக்கின் றோம். ஒரு விசுவாசியானவன் வேதத்தை வாசிக்கும் போது, முதலாவ தாக, நான் அந்த தேவ மனுஷனாக தேறினவனாகவும், நற்கிரியைகளை செய்ய தகுதியுள்ளவனாகவும் மாற வேண்டும் என்கின்ற சிந்தை ஒவ் வொரு விவாசியிலும் இருக்க வேண்டும். வேத வார்த்தைகளை பிரசங் கிக்கின்றவர்களும், சபையின் மேய்ப்பர்கள், போதர்கள், மூப்பர்களும், உதவி ஊழியங்களை செய்கின்றவர்களும், இன்னும் தங்களை அப் போஸ்தலர், தீர்க்கதரிகள், சுவிசேஷகர்கள் என்று கருதிக் கொள்கின் றவர்கள் யாவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் என்பதை மறந்து போய்விடக்கூடாது. நாம் கிருபையினாலே விசுவா சத்தை கொண்டு இரட்சிக்கப்பட்ட, விசுவாசிகளும், வேறு பிரிக்கப்பட் டவர்களும், அவருடைய தூய இரத்ததினாலே பரிசுத்தவான்கள் என்றும் அழைக்கப்படுகின்றோம்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தைகளை தியானிக்கும் போது, நீர் என்னை அழைத்த நோக்கத்தை மறந்து போய்விடாதபடிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 1:1-2