தியானம் (தை 04, 2026)
நம்பிக்கையிலே உறுதியாயதிருங்கள்
எபிரெயர் 10:23
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்கு த்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
'பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரி யவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்து க் குரி யவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக் கும்.' என்று யோவான் எழுதின முதலாம் நிருபம் 4ம் 5ம் வசனங்க ளிலே வாசிக்கின்றோம். இது மாறாத சத்தியம்! நாம் பெற்றுக் கொண்ட பெரிதான பாக்கியம்! அதிலே எந்த மாறுதலோ, வேற்றுமைய யோ இல்லை. எனினும், வேறு சில உண்மைகளையும் நாம் அறி ந்து உணர்ந்து கொள்ள வேண் டும். நாம் இந்த புதிய ஆண்டி லும் இந்த உலகத்தில் தான் இருக்கின்றோம் என்பதை மறந்து போய்விடக்கூடாது. உலகமுழுவ தும் பொல்லாங்கனுக்குள் கிடக் கிறதென்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் இந்த உலகதிலே இருக்கும்வரை உபத்திரவம் உண்டு. உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சி க்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். (1 பேதுரு 5:8) ஆனாலும் திடன்கொள்ளுங்கள்! உலக த்தை ஜெயித்த ஆண்டவர் இயேசு உங்களோடுகூட இருக்கின்றார் என்ற விசுவாசத்தில் அசையாமல் உறுதியாயிருங்கள். எதிராளியானவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்;. நமக்கு முன்சென்ற நம்முடைய சகோதரரிடத் திலும் அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறியிருக்கின்றது என்பதை வேத த்திலே காண்கின்றோம். அது மட்டுமல்ல, நம் வாழ் நாட்களிலும் கண்டு சாட்சி பகிர்ந்திருக்கின்றோம். எனவே, வெள்ளம் போல சாத்தான் வரும் போது பயந்து, கலங்கி, திகில் கொள்ளாதிருங்கள். அத்தகைய வேளையிலே ஒரு சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ள்ளே வாசம் செய்யும் ஆவியானவர், வெற்றிகொடி ஏற்றப் போகின்றார் என்பதை நினைத்து நன்றி கூறுங்கள். உலகத்தின் போக்கிற்கு சற்றும் இடம் கொடாதிருங்கள். ஆதியிலே கொண்ட விசுவாசத்தின் வைராக்கி யத்தை உங்களுக்கு பின்வரும் சந்ததியின் நவீன கொள்கைகளால் மாற்றிப் போடாமல், அவர்களும் தேவனை அறிய வேண்டிய பிரகாரமாக அறிய வேண்டும் என்று அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கை யாக உங்க ளுக்குள் இருப்பதை மறந்து போய்விடாதிருங்கள்.
ஜெபம்:
எனக்காக யாவும் செய்து முடிக்கின்ற சர்வ வல்லமையுள்ள தேவனே, வாழ்க்கையிலே எந்தப் புயல் வந்து மோதினாலும் நான் அசையாமல் உறுதியாக உம்மைப் பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 1:27