புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2025)

கணக்குப் பார்க்க நல்ல நேரம்!

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.


இந்த ஆண்டின் கடைசி நாட்களில் வந்திருக்கின்றோம். நம் வாழ்விலே இன்னுமொரு ஆண்டு சீக்கிரமாக சரித்திரமாக மாறிவிடும். 'நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறுக ளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது' என்ற வாக்குத்தத்தின்படி, தனிப்பட்ட விதமாக நாம் ஒவ்வொ ருவரும், தண்ணீர்களையும், ஆறு களையும் கடக்குமாற் போன்ற அனு பவங்கiளும், அக்கினியில் நட ந்து போவது போன்ற அனுபவங்க ளையும் கடந்து வந்திருப்போம். இந்த ஆண்டை சற்று திரும்பிப் பாருங்கள். வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவராகவே இருக்கின் றார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபை யுமுள்ளவர். (சங்கீதம் 103:8). நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தரு டைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. (புலம் பல் 3:22). கடந்து வந்த பாதையை திரும்பி பாருங்கள். எத்தனை சவால்களுக்கு நீங்கள் முகம் கொடுக்க வேண்டியதாக இருந்தது? எத்தனை போராட்டங்கள்? நாம் தேடிக் கொண்ட பிரச்சனைகள், நம்மை தேடி வந்த பிரச்சனைகள், நன்மைக்கு பதிலாக தீமை செய்த இடங்கள், தீமை பெற்றும் நன்மை செய்த இடங்கள், இப்படியாக பற்பல சந்தர்பங் களை கடந்து வந்திருக்கின்றோம். கர்த்தர் உண்மையுள்ளவராகவே இருக்கின்றார் என்பதில் வேற்றுமையான எந்த கருத்தும் இல்லை. அவ்வண்ணமாக விசுவாசிகளும், தாங்கள் பிதாவாகிய தேவனுடைய பிள்ளளைகள் ஆதலால், தாங்களும்; உண்மையுள்ளவர்களாக இருக்கி ன்றோம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால், உண்மை அதுவ ல்ல. தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே நம் வாழ்வை ஆராய்ந்து பாரக்கும் போது, நம்மை நாமே நிதானித்து அறிய முடியும். இந்த நாட்கள் கணக்குப் பார்பதற்கு நல்ல நாட்கள். தவறிப்போன இடங்களை நினைத்துப் பாருங்கள். அவைகளில் இன்னும் மனந்திரு ப்பாத குற்றங்களை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பாருங் கள். மன்னிப்பை கொடுக்க தவறி இடங்கள் எவை? இன்னும் மன்னி ப்பை பெற்றுக் கொள்ள மனதில்லாத இடங்கள் எத்தனை? வாழ்விலே இன்னும் வேதனை உண்டாக்கும் வழிகள் உண்டோ என்பதை தேவனிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை கர்த்தரு க்குள் புதுபித்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

வாக்குமாறாத உண்மையுள்ள தேவனே, வேதனை உண்டாக்கும் வழிகளை நான் விட்டு, உம்மிடம் திரும்பத்தக்கதாக உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்து என்னை உம் வழியிலே நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:24