புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2025)

பிறனுக்கானவைகளை நோக்குவாயாக...

பிலிப்பியர் 2:12

அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.


'அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.' என்பதன் கருப்பொருள் என்ன? மற்றவர்களுடைய தேவைகளை கருதிற்கொண்டு, எப்போதும் நன்மையான செயற்திட்டங்களை செய்து, பல்லாரயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஏழை எளியவர்களுக்கும் மற்றவர்கள் யாவருக்கும் தானதர்மங்களை செய்வதெ ன்பா? இத்தகைய செயல்கள் ஒவ் வொரு வாழ்விலே கனியாக உரு வாக வேண்டும் என்பது உண்மை. ஆனால், தேவ அன்பு இல்லாதவர்க ளும் இத்தகைய செயல்களை, ஒரு விசுவாசியைவிட பன்மடங்காக நடப் பிக்க முடியும். 'எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்ப ண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.' என்று 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம் 3ம் வசனத்திலே வாசிக்கின்றோம். பிரியமான சகோதர சகோதரிகளே, சுயநலமற்ற வாழ்க்கையானது கிறித் தவ வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கின்றது. 'கிறிஸ்து இயேசுவி லிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப் பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்ப டிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.' எனவே, கிறிஸ்து இயேசு வைப் போல கீழ்படிவும், மனத்தாழ்மையும் தன்னை விசுவாசி என்று அழைக்கும் ஒவ்வொருவனுக்கும் இருக்க வேண்டும். எதற்கு கீழ்படிய வேண்டும்? எதை மனத்தாழ்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்த வார்த்தையை மனத்தாழ் மையோடு ஏற்றுக் கொண்டு, அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும். எப்படி அதை நடைமுறையிலே காண்பிப்பது? மலைப் பிரசங்கத்திலே ஆண்டவர் இயேசு கூறிய வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள். இரக்கத்தையும் மன்னிப்பையும் யாவருக்கும் தாராளமாக வழங்கும் தேவனுக்குள் ஐசுவரியமுள்ளவர்களாக வளர்ந்து பெருகுங்கள். 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.'

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, உலகம் முழுவதையும் ஆதயப்படு த்தி என் ஆத்துமாவை நான் இழந்து போகாதபடிக்கு, அதிக ஜாக்கிரதை யோடு இரசிப்பு நிறைவேற பிரயாசப்பட நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மாற்கு 8:36