புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 26, 2025)

கிறிஸ்மஸ் ஆயத்தங்கள்

2 பேதுரு 3:12

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;


கிறிஸ்மஸ் நாளை முன்னிட்டு, எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு விதத்திலே ஆயத்தப்படுகின்றார்கள். சிலர் கிறிஸ்மஸ் நாளை முன் னிட்டு, தானதர்மங்களை செய்ய வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னாரகவே ஆயத்தங்களை செய்வார்கள். பல்வேறு மட்டங்களிலே, ஏழைக் குடும்பங்களிலே இருக்கும் சிறு பிள்ளைகளின் முகத்திலே, கிறிஸ்மஸ் நாளிலே முகமலர்சியை உண்டு பண்ண வேண்டும் என்று அவர்களுக்கு பரிசுப் பொருட்களை ஆயத்தப்படுத்துகின்றார்கள். அதாவது, தங்களிடம் இருப்பவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும், கிறிஸ்துவின் அன்பை மற்ற வர்களு க்கு வெளிக்காட்ட வேண்டும் என்பதும் சிலரின் நோக்கமாக இருக்க லாம். ஆலயங்களிலே நத்தார் நிகழ்சி என்று இயேசுவின் பிறப்பை சித்திரித்து காண்பிக்கும்படி, பாடல்களை பாடி, நாடகங்களை நடித்து, பிள்ளைகளுக்கு பரிசுப்பொருட்களை கொடுத்து, மேலும் பற்பல உதவி திட்டங்களை செய்து அந்த நாளை சிறப்பிக்கின்றார்கள். இவைகளிலே நன்மைகள் இல்லை என்று யாரும் நிராகரிப்பதில்லை. வேறு சிலர், குடு ம்பங்களாக, நண்பர்களாக, சக வேலையாட்களாக சிறு குழுக்களாய் சேர்ந்து, கிறிஸ்மஸ் நாளிலே, நாங்கள் உண்டு, குடித்து, வெறித்து சந்தோஷமாக நாளை களிக்க வேண்டும் என்று, ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், களியாட்டங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை தங்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆயத்தப்படுத்துகின்றார்கள். மெசியாவாகிய இயேசு தாமே, எத்தகைய மாம்ச இச்சைகளிலிருந்து மனிதர்களில் விடுதலைய டைய வேண்டும் என்று கூறினாரோ, அவைகள் யாவையும் அந்நாளிலே, திட்டமிட்டு மனப்பூர்வமாக நடத்தி முடிக்கின்றார்கள். கருப்பொருளாவது, கிறிஸ்மஸ் நாளை முன்னிட்டு, சில இடங்களிலே நன்மையான காரியங்களும், சில இடங்களிலே தீமைக்கு வழிவகுக்கும் களியாட்டங் களும் நடைபெற்று வருகின்றது. இதனால், இரண்டு சாராரும் தாங்கள் கிறிஸ்மஸ் நாளை முன்னிட்டு ஏதோ ஒன்றை செய்தோம் என்று மனத்திருப்தியடைகின்றார்கள். கிறிஸ்மஸ் ஆயத்தம் என்பது இது தானா? உங்கள் வாழ்விலே கிறிஸ்வின் பிறப்பின் மேன்மை இதுதானா? பிரியமானவர்களே, முதலாவதாக, மீட்பராகிய இயேசு இந்த உலகிற்கு வந்த நோக்கம் எங்களிலே நிறைவேற நாங்கள் இடங்கொடுக்க வேண்டும். பிதாவின் அநாதி தீர்மானம் நம்மில் நிறைவேற வேண்டும். இரண்டாம் வருகையிலே ஆண்டவர் இயேசுவை சந்திக்க ஆயத்த ப்பட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, உம்முடைய ஒரேபேறான குமாரனாலே நான் பிழைக்கும்படிக்கு அவரை இவ்வுலகத்திற்கு அனுப்பினீர் என்பதை மறந்து போகாமல், உம்வார்த்தையிலே நான் எப்போதும் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:9