புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2025)

எதிர்பார்த்த பலனைக் காணவில்லை?

சங்கீதம் 33:11

கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலை முறையாகவும் நிற்கும்.


ஏன் மனிதர்கள் ஆலோசனைகளை பெறும்படி ஆலோசகர்களை நாடித் தேடுகின்றார்கள்? தவறான தீர்மானங்களால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள மற்றும் மனக் குழப்பங்கலிளிருந்து விடுதலைக்கான வழியை கண்டுபிடிக்கும்படியாவும், தவறான தீர்மானங்களால் ஏற்படும் பின்வி ளைவுகளின் நஷ்டத்தை குறைக் கவும், யாகும்படியாகவும் அல்லது தங்கள் வாழ்க்கையிலே குறிப்பிட்ட விடயத்தைக் குறித்து தவறான தீர்மானங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் போன்ற பிரச்சனைகளுக்காக பற்பல விடயங்களிலே பாண்டித்தியம் பெற்ற நிபுணர்களை நாடுகின்றார்கள். சட்டத்துறை, மருத்துவ துறை, நிதி நிர்வாகத்துறை, கல்வித்துறை, தொழித்துறை, விளையாட்டுத் துறை போன்ற பற்பல துறைகள் இவற்றுள் அடங்கும். இவைகளினாலே பலன் இல்லை என்று எவரும் கூறிவிடமுடியாது. ஆனால், இவைகளினாலே மனிதர்களுக்கு மனச் சாமாதனம் கிடைக்கும் என்பதும் நிச்சயம் அல்ல. எடுத்துக்கா ட்டாக, கல்வியிலே சிறந்து விளங்கும் மாணவனொருவன், தன் பெற் றோரோடு தன் எதிர்காலத்தைக் குறித்த ஆலோசனைக்காக ஒரு நிபுணரிடம் சென்றிருந்தான். அவர் அந்த துறையிலே நன்றாக பாண்டித்தியம் பெற்றவரும் அனுபவமிக்கவருமாக இருந்தார். அந்த மாணவனின், கடந்த கால சாதனைகளையும், நிகழ்கால திறமைகளையும், தான் அறிந்த எதிர்கால சூழ்நிலைகளையும் மையமாக வைத்து, எந்தத் துறை யிலே அந்த மாணவன் கல்வி கற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதன்படி அந்த மாணவனும் கல்விகற்று, மேற்படி ப்பையும், பட்டப்படிப்பையும் முடித்து, குறிப்பிட்ட துறையிலே நல்ல வேலைக்கு அமர்ந்தான். அந்த நிபுணர் கூறிய ஆலோசனை நன்றாகவே இருந்தது. ஆனால், அவனுக்கோ தான் செய்யும் வேலைக் குறித்த மனச்சமா தானம் இல்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் திட்டங்களிலே மேலான ஆலோசனைகளை தள்ளிவிடாதிருங்கள். சமாதான காரணராகிய ஆண்டவர் இயேசு வழியாகவேயன்றி மனிதர்களுக்கு மெய்ச் சமாதானம் உண்டாவதில்லை. எனவே, எல்லா காலங்களையும் அறிந்தவரும், மனிதர்களுடைய இருதங்களை ஆராய்தறிகின்றவரும், நம்மை சிருஷ;டித்தவருமான சர்வ வல்லவருடைய ஆலோசனையை பின்பற்றுங்கள். அந்த ஆலோசனையிலே நிரந்தர சமாதானம் உண்டு.

ஜெபம்:

சமாதான காரணராகிய தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஆலோசனைகளை தள்ளிவிடாமல், அவைகளையே என் வாழ்விலே முதன்மைப்படுத்திக் கொள்ள ஞானத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 12:6