தியானம் (மார்கழி 10, 2025)
சத்தியத்தில் நிலைத்திருப்பது
1 யோவான் 1:10
நாம் பாவஞ்செய்யவில்லை யென்போமானால், நாம் அவ ரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை தனக்குத் தரவேண்டும் என்று தன் தகப்பனானவனிடம் கேட்டு, அதைப் பெற்ற பின்பு, எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன் மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, வேசிகளிடத்திலே தன் ஆஸ்தியை அழித் துப்போட்டான். அவன் உணர்வடைந்து, புத்தி தெளிந்தபோது, தன் தகப்பனானவனின் வீட்டை நினைத்துக் கொண்டான். மனம் திரும்பி, மனம் வருந்தி தன் தகப்பனான வனை நோக்கி: பரத்துக்கு விரோ தமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம் முடைய குமாரன் என்று சொல்லப் படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அருமையான மனந்திருப்புதல். அவன் தன் தகப்பன் வீட்டிற்கு திரும்பி விட்டான் என்பதன் கருப்பொருள் என்ன? அவன் தன் தான் வாழ்ந்து துன்மார்க்கமான பழைய பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, தப்பனானவர் கூறுவதைகேட்டு, குமாரனாக அல்ல, அவருடைய வேலைக்காரரில் ஒரு வனாக வாழ்வதற்கு அவன் தன்னை அர்பணித்தான் என்பதே அதன் பொருளாக இருக்கின்றது. ஆனால், அவன் மறுபடியும், தன் பழைய மோக பாவங்களுங்கு உடந்தையாக இருந்தவர்களோடு போக்கும் வரத்ததுமாக இருந்தால், அவனுடைய தகப்பனானவர் அதை ஏற்றுக் கொள்வாரா? அவன் ஒருமுறை மனந்திரும்பிவிட்டான், அதுபோதும் என்று விட்டுவிடுவாரா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அருமையான சகோதர சகோதரிகளே, தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி வாழ்வதென்பது, ஒருநாள் நடந்த சம்பவமல்ல. நாம் உயிரோடிருக்கு ம்வரை அவருடைய வார்த்தையிலே நிலைத்திருக்க வேண்டும். ஒருவேளை தேவனுடைய வார்த்தையை கேட்டும், அதன்படி வாழத் தவறி விட்டேன் என்று உணர்த்தப்படும் போது, மனம்திரும்ப வேண்டும். அது மாத்திரமல்ல, அதே பாவத்தை மறுபடியும் செய்யாதபடிக்கு, அந்தப் பாவத்தை உந்தும் காரணிகளை அல்லது சந்தர்பங்களை, தகாத உறவுகளை அல்லது நட்புக்களை நம் வாழ்விலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். அப்படியாக எல்லாக் காவலோடும் நம் இருதயத்தை நாம் தேவ வார்த்தையினால் ஆராய்ந்து பார்ந்து, காத்துக் கொள்ள வேண்டும். 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்ப தற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.'
ஜெபம்:
தயை பெருத்த தேவனே, நான் என்னை வஞ்சிக்காமல், சத்தியத்திலே நிலைத்திருக்கும்படி, என் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்தி ரும்பி வாழும் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபே 4:22-24