தியானம் (மார்கழி 02, 2025)
புத்தியுள்ள மனுஷன் யார்?
மத்தேயு 7:24
அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
இந்த உலகிற்கு நற்செய்தியை அறிவிப்பதும், தர்மஞ்செய்தல் போன்றவை கிறிஸ்தவ வாழ்விலே முக்கியமான அம்சங்களாக இருக்கின்றது. அவைகளை செய்தும், இந்த உலகம் முழுவதையும் ஆதயப்படுத்திய ஒருவன், தன் ஆத்துமாவிற்கு நஷ்டம் உண்டாக்கினால், அவனுடைய நற் கிரியைகளினாலே அவனுக்கு பலன் என்ன? எனவே, நாம், புத்தி யுள்ளவர்ளாக நடக்கும்படிக்கு, ஆண்டவராகிய இயேசு கூறிய சத் திய வார்த்தைகளை வாசித்து, தியானித்து, அவைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு விசுவாசியானவன் சபை வளர வேண்டும், சபை பெருக வேண்டும், பரலோகத்திற்கு ஆத்துமாக்களை சேர்க்க வேண்டும் என்று அயராது பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், அவன் மனதிலே உடன் சகோதரரைக் குறித்த கசப்பு இருந்தது. அவன் அதைக் குறித்து எண்ணமற்றவனாக தான் விரும்பும் நற்கிரியைகளை நடப்பித்து வந்தான். ஆனால், மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பி தங்களையும் மன்னியாதிருப்பார் ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். மன்னிப்பின் மாட்சிமையே நற்செய்தியின் முக்கிய அம்ச ங்களில் ஒன்றாக இருக்கின்றது. அந்த மன்னிப்பை தன் வாழ்விலே கடைப்பிடிக்க மனதில்லாமல், நற்செய்தியை அறிவிப்பதினால் அவனு க்கு வரும் பலன் அற்பமே. பிரியமானவர்களே, நாம் சம்பூரண பரிசுத் தராக எப்போதும் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. இந்த உலக த்திலே நாம் வாழும் வரை, இந்த சரீரயத்திலே காயங்கள் ஏற்படலாம். ஆனால், அந்த காயத்தை ஒருவன் பாரமுகமாகவிட்டு, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்குமென்றால், அது பாதாமான பின் விளைவுகளை ஏற்டுத்துமல்லவா? அதுபோலவே, நாம் வாழும்வரை மனதிலே கசப்புக்கள் உண்டா கலாம். ஆனால் அவைகளை அப்படியே பாரமுகமாகவிட்டுவிட முடியாது. அவைகளை மனித பெலத்தினாலே மேற்கொள்ள முடியாது. அவைகளை மேற்கொள்ளும்படிக்கு தேவ ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். அனுதினமும் புதுக் கிருபையை அவர் பொழிகின்றார். நாம் நடக்க வேண்டிய வழியை போதிக்கின்றார். எனவே, ஆண்டவரா கிய இயேசு கூறிய வார்த்தை கேட்டு அதன்படி நடவுங்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, உம்முடைய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிற, உமக்கு பிரியமான பிள்ளையாக நான் வாழ எனக்கு உம் வார்த்தையைக் குறித்த உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 1:7