புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2025)

மேலானவைகளையே நாடித் தேடுங்கள்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


நித்திய ஜீவனை கொடுக்கும் நற்செய்தியை ஆதாயத் தொழிலாக தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கொண்டிருக்கின்றவர்களுக்கு, பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. எனவே, தேவனுக்கு ஊழியம் செய் கின்றோம் என்று ஆரம்பித்து, தங்கள் தேவைகளுக்கு மேலாக, இடாம் பிகரமாக மாளிகைகளை தங்களு க்கு கட்டிக் கொண்டு, நிலங்களை தங்கள் முதலீடாக வைத்துக் கொண்டு, விலையுயர்ந்து வாகன ங்களையும், உலக பொருட்களை யும் தங்களுக்கென்று சேர்த்து வைக் கின்றவர்களுடைய வாழ்க்கை முறையைகுறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். பிரியமா னவ ர்களே, 'நீங்கள் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவ னுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலானவைகளைத் தேடு ங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்ப டுவீர்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையாகிய பொருளாசை ஆகிய இவைகளை பூமியில் உண்டு பண்ணுகின்ற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள். இவைகளின் பொருட்டே கீழ்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவ கோபாக்கினை வரும் என்று கொலோசேயர் மூன்றாம் அதிகாரதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 'பூமியிலுள்ளவைகளையல்ல, மேலான வைகளையே நாடுங்கள்' தேவனுக்கும் உலக பொருளுக்கும் உங் களால் ஊழியம் செய்ய கூடாது. பரலோகத்திலே உங்கள் பொக்கி ஷங்களை சேர்த்து வையுங்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கின்றது' 'உங்களிடம் உள்ளதை விற்று பிச்சை கொடு ங்கள்' ஐசுவரியவான் பரலோகத்தில பிரவேசிப்பது அரிதென்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்கின்றேன்' என்ற வேத வார்த்தைகளை அறிந்திருந்தும், உலக ஐசுவரியத்திற்குள் இருந்து, சுக போகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, அதை நாடடிச் செல்லும்படி உங்களுக்கு உபதேசிக்கும் போதனைகளைக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையு ள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் பெற்றுக் கொண்ட விலை மதிக்க முடியாத இரட்சிப்பை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

உன்னத்திலுள்ள மேலானவைகள் தேடுங்கள் என்று சொன்ன தேவனே, இந்த உலகத்திலுள்ள ஐசுவரியத்தின்மேல் என் கண்களை பதிய வைக்கும் போதனைகளிலிருந்து என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:19