புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2025)

தந்திரமான உபதேசங்கள்

2 பேதுரு 2:1

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்;


மனிதர்கள் தாங்கள் வாழும் வீட்டையும், வீட்டிலுள்ள பொக்கிஷங்களையும் கள்ளர்கள் கன்னமிட்டு திருடாதபடிக்கு பல முன்னேற் பாடுகளை செய்து கொள்கின்றார்கள். இந்த உலகமும் அதிலுள்ள பொக்கிஷங்களும் அநித்தியமானது என்று அறிந்திருந்தும், தாங்கள் வாழும்வரைக்கும் அவைகளை கருத்தோ பாதுகாத்துக் கொள்கின் றார்கள். அதைவிட மேலானதும், அழியாததும், நித்திய வாழ்வுக்கு அழைத்து செல்லும் இரட்சிப்பை நாம் எவ்வளவு அதிகமாக திருடர்க ளிடமிருந்து இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். யார் இந்த திருடர்கள்? கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார் கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதர்கள் இருப்பார்கள்: அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுக்களைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களை கிரயத்துக்கு கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்வார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்: அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும் என்று பேதுரு எழுதிய இரண்டாம் நிரூபத்தில் இரண்டாம் அதிகாரத்திலே வாசிக்கின்றோம். முதலாவதாக, இவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் அல்லது போதகர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள். இரண்டாவதாக, இவர்கள் வஞ்சகத்திற்கேதுவான உபதேசங்களை, ஏதேனில் இவர்களுடைய தலைவனாகிய பிசாசானவன் எப்படி ஏவாளை வஞ்சித்தானோ, அப்படியே, இவர்களும், கேட்டுக்கேதுவானவைகளை இச்சிக்கத்தக்கதாகவும், மனிதர்களுடைய பார்வையிலே யதார்த்த முள்ளதாகவும் காண்பித்துக் கொள்வார்கள். மூன்றவதாக, இது கேட்டுக் செல்லும் வாசலாக இருப்பதால், இவர்களை அநேகர் பின்பற்றுவா ர்கள். அக்காலத்திலே ஆண்டவராகிய இயேசுவின் பிரதான சீஷனாகிய பேதுரு தாமே, இப்படிப்பட்டவர்களின் முதலாவது ஆயுதம் என்ன வென்று தெளிவாக கூறியிருக்கின்றார். இவர்கள், பொருளாசையுடை யவர்களாய், தங்திரமாக வார்த்தைகளால் உங்களை தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்வார்கள். செழிப்பின் உபதேசம் இவ ர்களின் அடிப்படை உபதேசமாக இருக்கும். எனவே, இவர்களின் வஞ்சக வார்த்தைகளுக்கு இழுப்புண்டு போய்விடாதபடிக்கு எச்சரிக் கையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

அழியாமையை தரித்துக் கொள்ளும்படி என்னை அழைத்த தேவனே, அழிந்து போகின்றவைகளை உபதேசமாக கொண்டிருப்பவர்களை நான் நாடிச் செல்லாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:10