புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 17, 2025)

சிருஷ்டிகரையே தொழுது கொள்ளுங்கள்

ரோமர் 1:25

தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்,


எசேக்கியேல் என்னும் தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவ ஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் செய்கின்ற அருவருப்புக்களை, தேவனா கிய கர்த்தர்தாமே, தீர்க்கதரிசிக்கு காண்பித்தார். தேவனாகிய கர்த்தர் எசேக்கியேலை நோக்கி: மனுப்புத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப் பண்ணும்படியான தேவ ஜன ங்கள் செய்கின்ற மிகுந்த அருவருப் புகளை காண்கின்றாய் அல்லவா? இன் னும் மிகுந்த அருவருப்புகளை காண்பி ப்பேன் என்று கூறி, கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிரகாரத்திலே கொ ண்டு போனார்: இதோ, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முது கைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்திசைக்கும், நேர hகத் திருப்பினவர்களாய்க் கிழகே இருக்கும் சூரியனை நமஸ்க ரித்தார்கள். இது தேவனுக்கு கொடிய அருவருபாக இருந்தது. இன்று, தங்களை தேவனுடைய சுவிசேஷகர்கள் என்று அழைக்கும் சிலர் நித்திய ஜீவனுக்கென்று கொடுக்கப்பட்ட வேத வார்த்தைகளை புரட்டி, அந்த அந்நிய திருவிழாவைக்களை, விசுவாசிகள் கொண்டாட வேண் டும் என்று போதித்து வருகின்றார்கள். தங்கள் மனதை அங்குமிங்குமாக அலையவிடுகின்ற விசுவாசிகள் வர்கள், இத்தகைய தவறான வார்த்தை களை கேட்டு, இழுப்புண்டு போய், சபைகளுக்கு முன்பாக அந்த சூரிய நமஸ்கார திருவிழாவை கொண்டாடி வருகின்றார்கள். பிரியமான சகோ தர சகோதரிகளே, தேவனைவிட்டு விலகிப்போகும் போதனைகளைக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். உங்கள் சுத்தமனசாட்சியானது சூடுண்டு போகாதபடிக்கு, மனிதர்களை நோக்கிப் பார்க்காமல், தேவனாகிய கர்த்தரை நோக்கி பாருங்கள். பொல் லாங்கான காரியங்களை மாத்திரமல்ல, பொல்லாங்காய் தோன்றுகின்ற வைகளை விட்டுவிலகுங்கள். நீங்கள் விட்டு வந்த அருவருப்புக்களை மறுபடியும் பற்றிக் கொள்ளாதபடி விழிப்புள்ளவர்களாக இருங்கள். வேதப்புரட்டர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அனுதினமும் வேதத்தை கருத்துடன் வாசித்து, ஊக்கத்துடன் ஜெபியுங்கள். கிறிஸ்துவின் சாயலில் வளர்வதையே கருத்தில் கொள்ளுங்கள். வீண் தர்க்கங்களுக்கு விலகி, உங்கள் உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதாக.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, நீர் எனக்கு தந்த சுத்த மனசாட்சியானது சூடுண்டு போகாமல், உணர்வுள்ளதாக இருக்கும்படிக்கு நான் உணர்வுள்ள வாழ்க்கை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 2:23