புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2025)

அலைகிறவர்களாயிராமல்....

எபேசியர் 4:14

மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,


இந்நாட்களிலே, ஆண்டவராகிய தாமே, மலை பிரசங்கத்திலே, கள்ளத் தீர்க்கதரிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படிக்கும், அவர் களை எப்படி இனங்கண்டு கொள்வதென்பதையும் குறித்து கூறிய வார் த்தைகளை தியானித்து வருகின்றோம். இன்ரநெற் சமூக ஊடகங்கள் மலிந்திருக்கும் இந்த காலத்தி லே, காரியத்தைக் குறித்து நாம் இன்னும் அதிக ஜாக்கி ரதையாக இருக்க வேண்டும். கள்ளத் தீர்க்கதரிசிகளை குறி த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் போது, அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டிற்கு, வேலை செய்யும் இடத்திற்கு, கல்வி நிலையங்களுக்கு, கடைத்தெருக்களுக்கு உங்களை பின்தொடர்ந்து வருகின்றார்கள் என் பது பொருளல்ல. பல சந்தர்ப்பங்களிலே விசுவாசிகளே அப்படிப்ப ட்டவர்களை அநாவசியமாக பின்தொடர்ந்து தேடிச் செல்கின்றார்கள். ஏன் அப்படிப்பட்ட மனநிலையானது சில விசுவாசிகள் மத்தியிலும் சில சபைகளிலும் ஏற்படுகின்றது? 'மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப் பட்டவர் களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொரு ட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போ ஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசே ஷகராக வும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.' என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. இன்று கணிசமான விசுவாசிகள், தங் கள் சொந்த சபையின் மேய்ப்பர்கள், போதகர்களுக்கு செவி கொடுப்ப தைப் பார்க்கிலும், ஊரறியாதவர்களும், தங்களை தீர்க்கதரிகள், சுவி சேஷகர்கள் என்று காண்பித்து கொள்கின்றவர்களை பின்தொடர்ந்து அவர்களுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுப்பதற்கு முந்திக் கொள் கின்றார்கள். ஆண்டவர் இயேசு தாமே, தங்களைப்பற்றி கூறிய காரிய ங்களை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல், யாராவது வந்து, பரபரப்பான காரியங்களை பேசி, அடையாளங்களையும், அற்பு தங்களை காண்பிப்பார்களா என்று தங்கள் மனதை அங்குமிங்குமாக அலைந்து திரிய வைக்கின்றார்கள். நீங்களோ தேவ வார்த்தையை நிலைத்திருங்கள். ஜெபத்திலே தரித்திருங்கள். சத்திய ஆவியானவர் உங்களை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என்னைக் குறித்து நீர் கூறிய வார்த்தைகளை நான் அற்பமாக எண்ணி, மனத்திற்கு பிடித்த வார்த்தைகளுக்கு அலைந்து திரியாமல், சத்திய வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:7