தியானம் (கார்த்திகை 13, 2025)
இயேசு நிமித்தம் வரும் பாடுகள்
ரோமர் 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
மலைப்பிரசங்கத்தின் ஆரம்பத்திலே, ஆண்டவராகிய இயேசுதாமே, 'என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.' என்று கூறியிருக்கின்றதை நாம் இந்த ஆண்டிலே பெப்ரவரி மாதம் ஆறாம் திகதியில் ஆரம்பித்து சில நாட்களாக தியானித்து வந்தோம். இந்த உலகத்திலே நித்திய ஜீவனுக்கு போகின்ற ஒரே வாசல் வழியாக செல்பவர்கள் காரணமின்றி துன்புறுத்தப் பட்டு வருகின்றார்கள். 'நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவ லையும் அநுபவித்தார்கள்;. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண் டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை. அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகை களிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.' (எபிரெயர் 11:36-38). ஏன் அவர்கள் விருதாவாகவா இந்த உபத்திரவ ங்களையயெல்லாம் சகித்தார்களா? இதைக் குறித்து தேவ ஊழியரா கிய பவுல் தாமே 'எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவை களைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ;டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.' என்று கூறியிருக்கின்றார். மேலும் அவர் மரணமானாலும், ஜீவனானா லும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானா லும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வா னாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ;டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று உறுதியாய் அறிக்கை செய்தது போல, நாமும் அவருடைய அழைப்பை ஏற்று, அவர் வழியாக அவரோடு அவரில் உயர்விலும் தாழ்விலும் நிலைத்தி ருந்து முன்னேறிச் செல்வோமாக.
ஜெபம்:
இந்த உலகத்திலே உண்டாகும் உபத்திரவங்களை கண்டு சோர்ந்து பின்வாங்கிப் போய்விடாதபடிக்கு, கிறிஸ்துவிலே உம்மிலே நிலைத்திருந்து, மேன்மையானதைப் பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 16:24