புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2025)

இயேசு நாமம்!

அப்போஸ்தலர் 4:12

நாம் இரட்சிக்கப்படும்படி க்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவ ருடைய நாமமேயல்லா மல் வேறொரு நாமம் கட் டளையிடப்படவும் இல்லை


ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசுவின் சீஷர்களாகிய பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷன் தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே இருந்து, தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச் சை கேட்டான். அப்பொழுது பேதுரு: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி வலதுகையினால் அவ னைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உட னே அவனுடைய கால்களும் கரடுக ளும் பெலன் கொண்டது. அவன் குதி த்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொ ண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அக்கா லத்திலிருந்த யூத மதத் தலைவர்களின் ஆலோசனைச் சங்கத்தார் இந்த நன்மையும், அதிசயமுமான செயலை கேள்விப்பட்ட போது, சந்தோ ஷமடைவடைவதற்கு பதிலாக, அவர்கள் கோபமடைந்தார்கள். மேலும், அவர்கள் பேதுருவையும் யோவனையும் கைது செய்தார்கள். பேதுரு அவர்கள் சங்கத்தின் முன்னிலையிலே நின்று: இயேசு கிறிஸ்துவினா லேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாம மேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என் றான். பேதுரு இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டது அவர்களுக்கு மிகவும் இடறாலக இருந்தது. அதனால், அவர்களை நாவை எப்படி அடக்குவது என்று யோசனை பண்ணி, அவர்கள் துன்பப்படுத்த மன தாயிருந்தார்கள். மெசியா வெளிப்பட எதிர்பார்திருந்த அவர்களே, மெசி யாவாகிய இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவரை பின்பற்று கின்றவர்கள் துன்புறுத்தினார்கள். சிலர் இயேசுவின் இரத்தசாட்சியாக மரித்தார்கள். இவ்வண்ணமாகவே இன்றும் இயேசுவை பின்பற்று வோருக்கு நிநதனைகள் போராட்டுங்கள், அவமானங்கள் உண்டு. அதனால்; இந்த உலகத்திலே அந்த ஜீவ வாசல் இடுக்கமும் வழி நெரு க்கமுமாக காணப்படுகின்றது. இந்த சத்தியத்தை அறிந்து உணர்ந்து அவரிலே நிலைத்திருக்க நமக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை அவர் கொடுத்திருக்கின்றார்.

ஜெபம்:

இடுக்கமான வாசலை கண்டு பிடிக்க்க உணர்வுள்ள இருதயத்தை தந்த தேவனே, அந்த ஜீவ வாசல் வழியாக பிரவேசித்து, முடிவுபரியந்தம் அந்த வழியிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33