புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2025)

வேறு பிரிந்த வாழ்க்கை

அப்போஸ்தலர் 2:47

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.


இந்த உலகமானது முள்ளும் குருக்கும் களைகளும் நிறைந்ததாக இருக்கின்றது. அவைகள் மத்தியிலே நாம் முற்றிலும் நற்கனிதரும் உய ர்குலத் திராட்சக் கொடியாக, திராட்சச் செடியாகிய இயேசு கிறிஸ்துவிலே ஒட்டப்படிட்டிருக்கின்றோம். கோணலும், மாறுபாடுமான இந்த உல க்திலே, சுடர்விட்டு பிரகாசிக்கும் ஒளியாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். இந்த உலக்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டிருக்கும். எனவே, நாம் வேறு பிரிந்த வாழ்க்கையை வாழ வேண்டும். 'நீங்கள் இந்தப் பிரபஞ் சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரிய மும் பரிபூரணமுமான சித்தம் இன் னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக்குங்கள் என்று வேதம் கூறிகின்றது. நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் வாழ்வது எப்படி? முள்ளும் குருக்கும் களை களும் வளர்வது போல நாம் எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து விட முடியாது. வேறு பிரிந்த வாழ்க்கைக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டு. அந்த ஒழுங்குமுறையானது இயேசு கிறிஸ்துவினால் உண்டானது. நடை, உடை, அலங்காரம் யாவற்றிலும் பரிசுத்தம் உண்டு. பண்படுத் தப்பட்ட நிலம் போன்ற இருதயமுள்ளவர்கள், வேறு பிரிக்கபட்ட வாழ்க் கையை சந்தோஷத்தோடு ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால், தேவனுடைய வார்த்தையைக் கேட்டும், உலக ஆசைகளை விட்டுவிட மனதில் லாதவர்கள், களைகளைப் போன்ற வாழ்க்கை வாழ விரும்புவதால், தேவ சபையிலே முறுமுறுப்போடு தேவ காரியங்களை செய்து, 'எனக்கு ஏன் இந்த வாழ்க்கை' என்று சலிப்போடும், கசப்போடும் வாழ்ந்து வருகின்றார்கள். ஒருவரும் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பது பிதாவாகிய தேவனுடைய சித்தமாக இருக்கின்றது. அதனால், இந்த உலகம் முழுவதும் பண்பட்ட நிலமாக இருக்கின்றது என்பது பொருளல்ல. யாவரும் தங்கள் இருதயத்தை பண்படுத்த இடங் கொடுப்பார்கள் என்பதும் நிச்சயமல்ல. ஆதி சபையிலே, இரட்சிக்கப்ப டுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார். இன்று தேவ வசனத்தை கேட்க மனதில்லாத வர்களையும், இரட்சிப்பைக் குறித்து உணர்வற்றவர்களையும் வாழ்பவர்களை வருந்தி யழைத்து சபையிலே சேர்த்து, அவர்களை ஆதரித்து வருவதால், அவர்கள் வழியாக சபையிலே பல வேண்டப்படாத விளைவுகளை ஏற்படுத்தி, சபைகளிலே தேவனுடைய நாமம் தூஷpக்கப்படுவதற்கு ஏதுவான காரியங்கள் நடப்பதற்கு இடங் கொடுத்து விடுகின்றார்கள்.

ஜெபம்:

அன்பும் பரிசுத்தமும் உள்ள தேவனே, உம்முடைய வார்த்தையின்படி நான் வேறு பிரிந்த வாழ்க்கை வாழும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:24-30