தியானம் (கார்த்திகை 10, 2025)
பண்படுத்தப்பட்ட நிலம்...
ஏசாயா 61:3
அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
நிலத்திலே முள்ளும் குருக்கும் களைகளும் முளைப்பதற்கு அந்த நிலமானது பண்படுத்தப்பட வேண்டியதில்லை. அவை முளைத்த பின்பு, எவரும் அதை பராமரிக்க வேண்டியதில்லை. அவைகள் பெருகி பரபி வளர்வதற்கு பொதுவாக எந்த முயற்சிகளையும் எவரும் எடுக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலங்களை எவரும் தோட்டம் என்று அழைப்பதில்லை. ஒருவன் தான் விரும்பியத்தை, தான் விரும்பிய இடத்தில், தான் விரும்பிய நேரத்தில் தன் இஷ்டம் போல செய்கின்ற மனுஷனுக்கு இப்படிப்பட்ட முள்ளும் குருக்கும் களைகளும் விளைவிக்கும் நிலம் ஒத்திருக்கின்றது. முள்ளும் குருக்கும் களைகளும் எந்தப் பலனையும் கொடுப்பதில்லை. ஆனால், நல்ல நிலமானது பண்படுத்தப்பட்ட நிலமாக இருக்கின்றது. அந்த நிலத்தை பண்படுத்தும் தோடக்காரன், அங்கே முட்பூண்டுகளுக்கும், குருக்குக்கும், களைககளும் இடமில்லை. பறைகளும், சிறுகற்களும் அங்கிருந்து அகற்றப்படும். தேவ வசனமானது அங்கே கிரியை செய்வதற்கேதுவாக, பண்படுத்தப்பட்ட இதருயமுள்ளவன், வசனத்தை கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நல்ல பலனை கொடுக்கின்றவனாகவும் இருப்பான். இந்த உலகத்தின் போக்கானது, முள்ளும் குருக்கும் களைகளும் முளை ப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கின்றது. அவரவர் தான் விரும்பியதை செய்தவதற்கு தடையில்லை. ஆனால், தேவ சபையானது அப்படியாக இருக்க முடியாது. சில வேளைகளிலே சத்துருவானவன் மனுஷர் உறங்கும் போது, கோதுமைக்குள் களைகளை விதைதப் பதைப் போல விதைத்து விடுகின்றான். ஆனால் இன்று பட்டப் பகலிலே, மனுஷர்கள் முள்ளும் குருக்கும் களைகளும் முளைப்பதற்கு ஏதுவான இடமாக தேவ சபையை மாற்றிவிடுகின்றார்கள். ஜீவ வார்த்தைகளை விட்டுவிலகி, உலகத்கத்திற்கும் தேவ சபைக்கும் ஒரு பாளத்தை அமைத்து, உலக போக்கிலே வாழ்பவர்களுக்கு ஏற்றபடி சபையை மாற்றியமைத்து விடுகின்றார்கள். தாங்கள் பரந்த மனமுடையவர்கள் என்று வாசலை விவரிவாக்கி விடுகின்றார்கள். இப்படியான நடைமுறைகளினாலே, சபையிலே இருக்கும் சிலருடைய இருத யமானது தேவ வசனம் விழுந்து வளரும்படி பண்படுத்தப்படுவதில்லை. அதனால், அங்கே தேவன் விரும்பும் பலன்களை காண முடியவில்லை. நீங்களோ கர்த்தர் தமது மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்கள். எனவே எச்சரிக்கையுள்ளவர்காக இருங்கள்.
ஜெபம்:
நல்ல கனிகளை கொடுக்கும்படி என்னை நீதியின் விருட்சமாக நாட்டிய தேவனே, நான் இந்த உலகத்தின் போக்கிற்கு உடன்பட்டு, என் மனக்கண்களை குருடுபடுத்திவிடாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 15:1-8