புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2025)

எவரையும் புறம்பே தள்ளாதவர்!

ரோமர் 2:11

தேவனிடத்தில் பட்சபாதமில்லை.


இந்த உலகத்திலே மேன்மக்கள், கீழ்மக்கள், கல்விமான்கள், கல்லாதவர்கள், செல்வந்தர், ஏழைகள் என்ற பற்றபல பாகுபாடுகள் உண்டு. அதன்படையிலே பல்வேறுபட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. சிறப்பு குடிமக்கள் மத்தியிலே சாதாரண மக்களுக்கு இடமில்லை. சில இட ங்களிலே, பாடசாலைகள், வேலை இடங்கள், குடியிருப்புகள், ஏன் சில ஆலயங்கள் கூட பிரத்தியேகமாக சில குழுக்களுக்கென்று இயங்கி வருகின்றதை செய்திகள் வாயி லாக அறிந்து கொள்கின்றோம். இவை யாவும் குறிப்பிட்ட தரா தரங்களின் அடிப்படையிலே வகு ப்படுகின்றது. ஆனால், பரலோகத் திற்கு செல்வதற்கான வழி அப்படியாக அமைக்கபபடவில்லை. உயர் ந்தவன், தாழ்தவன், துன்மாரக்கன், சன்மர்க்கன் என்ற பாகுபாடு இல் லாமல், எத்தனை பேர், மனம்திரும்பி, ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, பிதாவாகிய தேவனுடைய சித்ததிற்கு இடங்கொடுக்கின்றார்களோ, அத்தனை பேரும் பரலோகம் செல்லும் சிலாக்கியத்தை கொடுத்திருக்கின்றார். 'துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? ஆவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.' (எசேக்கியல் 18:23). தம்மிடத்தில் வருகின்ற எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. வருதப்பட்டு பாரஞ் சுமக்கின்றவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவன் (மத்தேயு 11:28) என்று அழை ப்பை யாவருக்கும் கொடுத்திருக்கின்றார். அவரிடத்தில் பட்சபாதம் இல்லை. 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவசி க்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். விசுவசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ள வனாயிராதபடியினால் அவன் ஆக்கினத்தீர்ப்பகுட்பட்டாயிற்று. ஒளி யானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்ல hதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குத் காரணமாயி ருக் கிறது. போல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினி டத்தில் வராதிருக் கிறான்.' (யோவான் 3:17-20). எனவே, நீங்கள் சோர்ந்து போகாமல் கிறிஸ்துவிலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பட்சபாமில்லாமல் அவனவனுடைய கிரியைகளுக்கு தக்கதாக பலன் அளிக்கின்ற தேவனே, எனக்கு முன்பாக இருக்கும் இந்த அருமையான அழைப்பை நான் விட்டுவிடாதபடிக்கு என்னை கரம்பிடித்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28