தியானம் (கார்த்திகை 07, 2025)
இலகுவாக தோன்றும் வழிகள்...
அப்போஸ்தலர் 4:12
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை
ஒரு கிராமத்திலே, பிள்ளைகள் கல்வி கற்பதற்கு தகுந்த பாடசாலையோ கல்வி முறையோ இல்லாதிருந்தால், அந்த ஊரின் மூப்பர் நலன் விரும்பிகள் யாவரும் இணைந்து, நாட்டின் அதிகாரிகளின் அனுசர ணையோடு ஒரு நல்ல பாடசாலையை அமைத்து, பாலர் பாடசாலையிலிருந்து பாடங்களை ஒழுங்காக சிறப்பான முறையில் கற்றுக் கொடு த்தார்கள். மாணவர்கள் பாடங்களை உண்மையாகவே கற்றுக் கொண் டார்களா என்று உறுதி செய்ய, முன்குறித்த கால அட்டவணைகளின்படி பரீட்சைகள் நடத்தப்பட்டது. அந்த பரீட்சையின் சித்தி பெற்றவர்கள் தேச மட்டத்திலும் அங்கீகாரம் பெற்றிருந்தா ர்கள். ஆரம்பத்திலிருந்து, இது நன் மையான வழி என்று அறிந்திருந்தும், சிலர், இது கடும் போக்கான பாடசா லை, இங்கு படித்து யார் பட்டம் பெறு வான் என்று முறுமுறுத்து வந்தார்கள். நாட்கள் கடந்து சென்றதும், வியாபார நோக்கமுடைய சிலர், ஒன்று கூடி அந்த ஊரிலே இன்னுமொரு கல்வி நிலைத்தை ஸ்தாபித்தார்கள். அந்த ஸ்தாபனத்திலே கல்வி கற்பதற்கான அனுமதி ஒழுங்கு முறைகள் இலகுவாக்கப்பட்டது. மாதாந்தம் கட்டணங்களை ஒழுங்காக செலுத்துப வர்கள், கல்வி நிலையத்திற்கு ஒழுங்காக சமூகமளிக்கத் தவறினாறிலும் பெரிதான பிரச்சனைகள் ஏதுமில்லை. பரீட்சைகள் இலகுவாக்கப்பட்டது. அதிகபடியானோர் படித்து பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள். இடாம்பீ கரமான பட்டமளிப்பு விழாவிலே, அழகான சான்றிகள் வழங்கப்பட்டது. அநேகர் அந்த கல்வி நிலையத்திற்கு செல்ல ஆரம்பித்தார்கள். ஏன், அங்கு யாவுமே அவர்களுக்கு இலவாக இருந்தது. ஆனால், அந்த கிரமாமத்தில் ஒழுங்காக இயங்கி வந்த பாடசாலையானது அவர்களு டைய பார்வைக்கு இடுக்கமான வழியாக இருந்தது. இலகுவாக படித்து பட்டம் எடுப்பது விசாலமான வழியாக இருந்தது. இந்த உலக போக்கின்படி வாழ விரும்புகின்றவர்கள் பொதுவாக இலகுவான வழிகளை யே நாடித் தேடுவார்கள். தங்கள் விருபத்திற்கும் முற்போக்கான கொள் கைகளுக்கும் உடன்படாத வழியை, கடினமான வழி என்று தாங்களும் அந்த உண்மையான வழியிலே செல்வதை நிறுத்துவதுடன், அதிலே செல்பவர்களையும் எதிர்த்து நிற்கின்றார்கள். பிரியமான சகோதர சகோத ரிகளே, நல்ல வழியை தேவனாகிய கர்த்தர் யாருக்கும் அடைத்து வைக் கவில்லை. அந்த விலை மதிக்க முடியாத பலனை தரும் அந்த வழிக்கு எந்த பணத்தையும் விலையும் போட்டதுமில்லை. நித்திய ஜீவனை தரும் அந்த ஒரே வழியையே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெபம்:
நித்திய ஜீவனை தரும் ஒரே வழியயை எனக்கு காண்பித்த தேவனே, அந்த வழியின் மேன்மையை நான் உணர்ந்து, அந்த வழியிலே நான் வாழும்படிக்கு எனக்கு ஞானமும் பெலனும் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 5:5