புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2025)

ஜீவனுக்கு செல்லும் வழி

யோவான் 14:6

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, மத்தேயு 5ம் அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆண்டவராகிய இயேசுவின் மலைப் பிரசங்கத்iதை, வசனம் வசனமாக தியானித்து வருகின்றோம். இந்த இடத்திலே பற்பல காரியங்களை குறித்து ஆண்டவராகிய இயேசுதாமே விளக்கிக் கூறியிருக்கின்றார். தம்மை பின்பற்றுகின்றவர்கள் வாழ வேண்டிய வழியை காண்பித்திருக்கின்றார். அந்த வழியின் முடிவு எங்கே? அந்த வழியாய் செல்கின்றவர்கள் ஈற்றிலே நித்திய ஜீவனைப் பெற் றுக் கொள்கின்றார்கள். எனவே, பரிசுத்த வேதாகமத்தை பிரித்து பிரி த்து கற்றுக் கொண்டாலும், வேத த்தின் பிரதான நோக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கையிலும் அதனால் பலன் உண்டு, ஆனால் அதற்காக மாத்திரம் நாம் வேதத்தை பின்ப ற்றுவோமாக இருந்தால், நம்முடைய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாக இருக்கும் என்று வேதம் கூறுகின்றது. நித்திய வாழ்வுக்கு செல்லும் வழியை ஏற்படுத்தி, அதை நமக்கு காண்பிப்பதற்காகவே ஆண்டவ ராகிய இயேசு இந்த பூவுலகிற்கு வந்தார். ஆனால், மனிதர்களோ, தங்களுக்கென்று பற்பல வழிகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். எங் கள் முன்னோர் இவ்வழியாகதான் சென்றார்கள் என்றும், எந்த வழி களால் சென்றாலும், மோட்சம் செல்லலாம் என்று தங்களுக்குள்ளே நிச்சயித்துக் கொண்டு, தங்கள் கண்போல வழிகளிலே சென்று கொண்டிருக்கின்றார்கள். இப்படியும் வாழலாம் எப்படியும் வாழலாம் என்று வாசல்களை அகலமாக திறந்து விடுகின்றார்கள். அந்த வழிகள் அவர்க ளுடைய மனதிலுள்ள இச்சைகளை நிறைவேற்றுக் கொள்வதற்கும் இலகுவான பாதையாக இருக்கின்றது. உலகத்தின் போக்கிற்கும், உலக ஞானத்திற்கும் அவைகள் மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அநே கரால் அது அங்கீகாரம் பெற்றிருக்கின்றது. எனவே, அந்த வழிகளை அநேகர் தங்களுக்கென்று தெரிந்து கொள்கின்றார்கள். அவைகள் மனிதர்களுக்கு செம்மையானவைகளாக தோன்றுகின்றது. அதன் முடிவோ அழிவு என்று வேதம் கூறுகின்றது. ஆனால், நித்திய வாழ்வுக்கு செல் லும் ஒரே ஒரு வழி உண்டு. இந்த மனிதகுலத்தை மீட்க வந்த ஆண் டவராகிய இயேசுவே அந்த வழியாக இருக்கின்றார். நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்று மீட்பராகிய இயேசு கூறியிருக்கின்றார். அவரையல்லாமல் மனித குலத்திற்கு இரட்சிப்பு இல்லை.

ஜெபம்:

பாதாளத்தின் வல்லடிக்கு என்னை தப்புவித்து காத்த தேவனே, நித்திய வாழ்விற்கு செல்லும் ஒரே வழியாகிய உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவை பற்றிக் கொண்டு வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:7