புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2025)

நியாயப்பிரமாணத்தின் முழுமை

மத்தேயு 22:40

இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.


நியாயப்பிரமாணத்தைக் குறித்த தர்கங்கள் அன்று மட்டுமல்ல, இன்றும் தேவ ஜனங்கள் மத்தியிலே இருந்து வருகின்றது. நியாயப்பிரமாணது கொடுக்கப்பட்ட காலத்திலே, அநேக விஷயங்களைக் குறித்து, தேவ னாகிய கர்த்தர் விளக்கிக் கூறியிருக்கின்றார். அவைகள் இன்று விசு வாசிகள் பின்பற்ற வேண்டுமா? அல்லது அவைகளை நாம் முற்றாக தள்ளிவிட முடியுமா? இன்றய தியானத்திலே அதை நாம் சுரு க்கமாக பார்ப்போம். மலைப் பிர சங்கத்திலே ஆண்டவராகிய இயேசுதாமே, தம்மை பின்பற்றி வருகின்றவர்களை நோக்கி: மனு ஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம் என்று கூறியிருகின்றார். இந்த சந்தர்ப்பத்திலே, ஆண்வராகிய இயேசு தாமே, அயலவனைக் குறித்த காரியத்திலே, நியாயப்பிரமாணத்தின் நோக்கம் இன்னதென்று ஒரு வசனத்திலே சுருக்கமாக கூறியிருக்கின்றார். எனவே, அதன் தார்பரி யத்தை உணர்ந்து, அந்த வசனத்தின் உள்ளடக்கத்தை நாம் இன்றும் செய்து வருகின்றோம். வேறொரு சமயத்திலே, பரிசேய வர்க்கத்தை சேர்ந்து நியாயசாஸ்திர் ஒருவன் ஆண்டவரரிய இயேசுவை சோதிக் கும்படி: போதகரே, நியாயப்பிரமா ணத்திலே எந்தக் கற்பனை பிரதா னமானது என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்து மாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. இது முதலாம் கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவெ ன்றால், உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்டகளும் அடங்கியிருக்கிறது என் றார். பாருங்கள், இந்த இரண்டு வசனங்களிலும் நியாயப்பிரமாணத்தின் முழுமையை ஆண்டவராகிய இயேசு சுருக்கமாக கூறியிருக்கின்றார். வசனங்களிலே சுருமாக இருந்தாலும், நடைமுறையிலே இவை சுருக் கமானவைகள் அல்ல. எனவே, வேதத்தைக் குறித்த வாக்குவாதங்களை விட்டுவிட்டு ஆண்டவராகிய இயேசு கூறிய வார் த்தைகளின் கருப்n பாருளை உணர்ந்து, கற்பனைகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தை மன தார நிறைவேற்ற பழகிக்கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, உம்மு டைய கற்பகைளின் கருப்பொருளை உணர்ந்து, அவைகளை நான் முழுமனதோடு கைகொள்ள எனக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:8