புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2025)

கிறிஸ்துவின் சாயலில் வளர வேண்டும்

கொலோசெயர் 3:2

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.


'தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;.' என்று ரோமர் 8ம் அதிகாரம் 29 வசனத்திலே வாசிக்கின்றோம். நம்முடைய அழைப்பு எப்படிப்பட்டதென்று பாருங்கள். இந்த உலகிலே, மனிதர்கள் தாங்கள் இன்னாரைபோல, கல்வி கற்க வேண்டும். அந்த தலைவரைப் போல வாழ வேண் டும் என்று சொல்லிக் கொள் வார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இன்னாரைப் போல பெரியவர்களாக வர வேண்டும் என்று விரும்புவார்கள். 'நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்;'. மனித குலம் நித்திய மரணத்தின்று மீட்படையும்படி தம்முடைய ஒரே பேறான குமாராகிய இயேசு கிறிஸ் துவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். அநேகர் குமாரன ஏற்றுக் கொள்ளவில்லை. 'தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம் மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்க ளில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன் மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங் களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். கிருபையினாலே விசு வாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' (எபேசியர் 2:4-8). தூயின் கருவிலிருந்து நம்மை வேறு பிரித்தார். நம்மை முன்குறித்தார். 'எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான் களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.' எனவே, நாம் கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டும். மற்றவர்கள் என்ன செய்யாமல் இருக்கின்றார்கள் என்று அவர்களின் வாழ்க்கையின் நடைமுறைகளை பார்த்து, அவர்களை குறித்து விமர்சித்து, காலத்தை விரயமாக்காதபடிக்கு, உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாட்களை பிரயோஜன ப்படுத்திக் கொள்ளுங்கள். நன்மையே சிந்தித்து, அதையே நிறைவேற்ற பிரயாசப்படுங்கள். தேவ ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக.

ஜெபம்:

மேன்மையானவைகளை நாடித் தேடும்படி என்னை அழைத்த தேவனே, மற்றவர்களின் தீமையான செயல்களை பார்த்து சோர்ந்து போகாமல், கிறிஸ்துவின் சாயலிலே நான் வளர எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 3:18