புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2025)

உன்னதமானவருக்கு பிள்ளைகளாயிருப்பீர்கள்

மத்தேயு 5:46

உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களு க்குப் பலன் என்ன?


'அந்த மனுஷன் எப்போதுமே கேடான காரியங்களையே செய்து வருபவன். அவனிடத்டதில் நன்மையை எதிர்பார்க்க முடியாது. அவன் எனக்கு எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. எனவே, அவனுடைய குறைவிலே நான் அவனுக்கு உதவி செய்யப் போவதில்லை' என்று ஒரு விசுவாசியாவன் கூறிக் கொண்டான். அந்த விசுவாசியானவன் 'மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;' என்று நம் ஆண்டவராகிய இயேசு கூறிய வசனத்தை இந்த உலக தத்துவங்களின்படி தவறாக புரிந்து கொ ண்டு, அந்த மனுஷனிடமிருந்து எதையும் நான் எதிர்பார்க்கவில்லை எனவே நான் நன்மையை செய்யாமல் இருப் பது நியாயம் என்று எண்ணிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றோம் என்பதை ஒருபோதும் மறந்து போய்விடக்கூடாது. எனவே, நாம் இந்த உலக நியதிகளின்படியல்ல, அதற்கு மேலானவைகளை தேடுகின்றவர்களாயும், மேன்மையானவைகளை நடப்பிக்கின்றவர்களாகவும் இருக்கின்றோம். 'உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங் களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்று ஆண்டவராகிய இயேசு மலைப் பிரசங்கத்தில் 5ம் அதிகாரத்தில் கூறியதை முன்னைய மாதங்களிலே நாம் தியானித்ததை மறந்து போய்விடாததிருங்கள்.

ஜெபம்:

உன்னதமான பரலோக தேவனே, உம்முடைய பிள்ளை என்று அழைக்கப்படுவதற்கு நீர் எனக்கு கொடுத்த பரம பாக்கியத்திற்காக நன்றி. உம்முடைய பிள்ளையான நான் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:36