புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2025)

பிள்ளைகளுக்குரிய சுபாவம்

ரோமர் 12:17

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.


நன்மை செய்வார்கள் என்று எப்படி எதிர்பாரக்க முடியும்? 'மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;' என்பதின் கருப்பொருள் என்ன என்பதை நன்றாக அறிந்து கொள் ளுங்கள். இந்த வார்த்தையை தன் னைப் பின்பற்றி செல்பவர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கூறினார். நாம் அவரை பின்பற்றுகின்றவர் களா இருந்தால், துர்மனசாட்சி நீங்க கழுப்பட்ட நமக்கு, மனுஷர்கள் யாவ ரும் நன்மை செய்ய வேண்டும் என்பதையே நாம் எப்போதும் விரு ம்புகின்றவர்களாக இருப்போம். அந்த சிந்தையின்படியே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும். நாம் அப்படி விரும்புவதால், மனுஷர்கள் எப்போதும் நமக்கு நன்மை செய்வார்கள் என்பது பொருளல்ல. இந்த உலகத்திலே நன்மைக்கு பதிலாக தீமை செய்கின்றவர்கள் இருக்கின்றார்கள். 'நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.' என்று நீதிமொழிகள் 17ம் அதிகாரம் 13ம் வசனத்திலே வாசிக்கின்றோம். அதுபோது, நம்முடைய மனசாட்சி சுத்தமாக இருந்தால், அங்கே தீமை தங்குவதற்கு இடமில்லை. தேவனைப் பின்பற்றுகின்றவர்களுக்கு, 'தேவனே தம்மு டைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.' ஆதலால் நாம் ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்ற மற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளு மாயிருக்கும்படிக்கு, தேவனுடைய நாமத்தினிமித்தம் செய்யும் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்வதை சுபாவமாகிக்க கொள்ள வேண்டும். இதை எந்த மனுஷடைய பெலன த்தினாலும் நடத்தி முடிக்க முடியாது. ஆனால், பெலவீனராகிய நம்மை பெலப்படுத்தும் தேவ கிருபையானது, நமக்கு அளிக்கப் பட்டிருக்கி ன்றது. நமக்கு வாசம் செய்யும் ஆவியானவர்தாமே, சகல சத்தியத் திலும் நாம் நடக்கும்படிக்கு நம்மை வழிநடத்திச் செல்கின்றார். கிறிஸ்துவின் நாளிலே உண்டாகும் பெருமகிழ்சியை விசுவாச கண்களால் காணம்படிக்கு பிரகாசமுள்ள மனசாட்சியை தந்து நம்மை பெலப்படுத்தி நடத்திச் செல்கின்றார். எல்லா கிரியைகளுக்கும் பலனளிக்கும் பரம பிதா நமக்கு இருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, புறம்பேயிருக்கின்றவர்களதும், உம்மை அறிந்து அறியாமல் வாழ்கின்றவர்களதும் அநியாயமான செயல்களை கண்டு, நான் சோர்ந்து பின்வாங்கிப் போகாதபடிக்கு என்னை காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:5