தியானம் (கார்த்திகை 01, 2025)
எவைகளை விரும்புகின்றீர்கள்?
மத்தேயு 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;
ஒரு ஊரிலே பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தன் அயலிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனுக்கெதிராக குற்றம் ஒன் றை செய்து விட்டான். அந்த மனிதனானவன் சில சாட்களோடு, ஊரின் பொலிசாரிடத்தில் சென்று முறையீடு செய்யும்படி ஆயத்தமாகிக் கொண் டிருந்தான். அப்படியாக அந்த மனிதனாவன், அந்த வாலிபனுக்கெதிராக குற்றச்சாட்டை பொலிசாரிடம் தெரி யப்படுத்தினால், அவர்கள் நிச்சய மாக அந்த வாலிபனை கைது செய் வார்கள் என்பதை அந்த வாலிப னின் குடும்பத்தினர் நன்கு அறிந்திரு ந்தார்கள். அந்த வாலிபனின் பெற் றோரின் மனம் பதைபதைத்து. அவர் கள் கண்ணீரோடு அந்த மனிதனிடம் விரைந்து சென்று, தங்கள் மகனான வனுக்காக பரிந்து பேசினார்கள். தங்களுக்கு இரங்கும்படி வேண்டிக் கொண்டார்கள். முதலாவதாக அந்த பெற்றோரின் பக்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம். நீங்கள் அந்த வாலிபனின் பெற்றோராக இருந்தால், அந்த மனிதனாவன் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்பீர்கள்? அவன் பொலிசாரிடம் சென்று குற்றச்சாட்டை பதிவு செய்யாமல், உங்கள் மகனானவனை மன்னித்து விட வேண்டும் என்று விரும்புவீர்களல்லவோ? அப்படி யானால், நீங்கள், உங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை அந்த பிரகாரமாக மன்னித்து விட வேண்டும். இரண்டவதாக, அந்த மனிதனானவன், வருங்காலங்களில் தனக்கு தயவும் இரக்கமும் கிடைக்கும்படி, தற்போது தனக்கெதிராக குற்றங்கள் செய்தவனை மன்னித்து விடுவது அவனுக்கு நன்மையாகதாக இருக்கும். ஆனால், இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலே விசுவாசிகள் அகப்பட்டுக் கொள்ளும் போது, பொதுவாக, பொறுத்த சமயத்திலே தேவனுடைய வார்த்தையை மறந்து, மாம்சத்திலே செயற்பட்டு விடுகின்றார்கள். குற்றங்கள் சாட்சிகள் வழியாக உறுதி செய்யப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய தகுந்த தண்டனையை வழங்குவது, இந்த உல கத்தின் நீதியாக இருக்கின்றது. அது நியாமம் என்று இந்த உலக த்திலுள்ள சன்மார்கர்களும் ஏற்றுக் கொள்வார்கள். 'மனுஷர் உங்க ளுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்;' என்று ஆண்டவராகிய இயேசு கூறியி ருக்கின்றார். சுத்த மனசாட்சியை பெற்ற நீங்கள் மற்றவல்களுக்கு நன்மையானதையே செய்ய நாடுங்கள்.
ஜெபம்:
நன்மைகளின் ஊற்றாகிய என் தேவனாகிய கர்த்தாவே, நான் தீமைக்கு கைமாறகா தீமை செய்யாதபடிக்கு, உம்ஐமப் போல நன்மை செய்யும் உள்ளத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - கலாத்தியர் 6:10