தியானம் (ஐப்பசி 31, 2025)
ஜெபமே ஜெபம்
கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
ஒரு குறிப்பிட்ட தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலானது, ஆழ் சமுத்திரத்திலே சில நாட்கள் சென்றபின்பு, நடுச் சமுத்திரத்திலே கப்பலின் தொலை தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட கோளாறினிமித்தம், தகவல் நிலையங்களோடுள்ள தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டது. அந்தக் கப்பலின் மாலுமிகளின் தலைவன், மிகவும் அனுபவிக்கவராக இருந்த போதும், கப்பலை எந்தத் திசையிலே கொண்டு செல்ல வேண் டும், எங்கெங்கெல்லாம் ஆபத்துக் கள் இருக்கின்றது. காலநிலை எப் படி மாறப்போகின்றது என்பதை அறியாதிருந்தார். தன்னை நம்பி, கப்பலேறிய இத்தனை ஜனங்களை எப்படி சென்றடைய வேண்டிய துறைமுகத்திற்கு, அபாயங்கள் இல்லாமல் கொண்டு செல்வேன் என்று கலக்கமடைந்தார். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய விசுவாசக் கப்பலும், பரம தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அந்த யாத்திரையிலே, தேவனோடுள்ள தொடர்வு இன்றியமையாதது. அந்தத் தொடர்பானது ஜெபத்தின் வழியாக ஏற்படுத்தப்படுகின்றது. அந்த தொடர்பு துண்டி க்கப்பட்டால், நாம் செல்லும் வழியை அறியாதிருப்போம். செல்லும் வழியிலே தொலைந்து போய்விடுவோம். துவறான வழிகளை தெரிந்து கொள்வோம். 'கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீ ர்களிலே தொழில் செய்கிறார்களே, அவர்கள் கர்த்தருடைய கிரியைக ளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந் தளிக்கப்பண்ணும். அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்கு கிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுக ளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். கொந்தளிப்பை அமர் த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினி மித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுக த்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.' (சங்கீதம் 107:23-30). எனவே, ஜெபமே ஜெயம் தரும் என்பதை அறிந்து, தேவனோடுள்ள உறவிலே உறுதியாய் நிலைத்திருங்கள்.
ஜெபம்:
என்னை வழிநடத்தி செல்லும் தேவனே, நீர் இல்லாமல் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது என்ற சத்தியத்தை உணர்ந்து, நான் எப்போதும் உம்மோடுள்ள உறவிலே நிலைத்திருக்க நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:12