தியானம் (ஐப்பசி 29, 2025)
யாரிடத்தில் போவோம்?
சங்கீதம் 118:8
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
கடந்த சில நாட்களாக, கர்த்தராகிய இயேசு மலைப்பிரசங்கத்தை மையமாக வைத்து, தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வதைக் குறித்து தியானித்து வருகின்றோம். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னி டத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கு ம்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண் டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன் மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, தேவனிடத்தில் ஜெபம் செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள். எனக்கு உடனடியாக பதில் தேவை என்று வேறு வழிகளை தேடலாமோ? 'மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.'. கர்த்தராகிய இயே சுவைத் தவிர நமக்கு வேறொரு வழி இந்த உலகத்திலே இல்லை. நான் பாவம் செய்தேன் எனவே தேவனிடத்தில் சேருவது எப்படி என்று மரிதர்களை நம்பி வேறு வழிகளை தேடலாமோ? 'பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனு டைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நா ளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பி க்கையை வைக்கிறவன் பாக்கியவான்.' எனவே உயர்ந்திருந்தாலும், தாழ்ந்திருந்தாலும், பாவிகளாக இருந்தாலும், நீதிமான்களாக இருந் தாலும், ஆண்டவராகிய இயேசுவை பிரிந்து யாரிடத்தில் போக முடி யும்? நித்திய வாழ்வு தரும் வசனம் அவரிடமே உண்டு. அவர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய் யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
ஜெபம்:
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கின தேவனே, நான் எப்போதும் எந்த வேளையிலும் உம்மை நம்பியிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங் 103:3-5