புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2025)

சத்தியதினின்று விலகாதபடி பாருங்கள்

யோவான் 10:16

அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.


'கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண் டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளு மாயிருக்கிறோம்.' என்று சத்திய வேதம் கூறுகின்றது அப்படியானால் விசுவாச மார்க்கத்தாரில் சிலர் ஏன் நல்ல மேய்ச்சலை காணாமல் போகி ன்றார்கள்? நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந் திருக் கிறதுபோலவும், நான் என்னு டையவைகளை அறிந்தும் என்னு டையவைகளால் அறியப்பட்டுமிருக் கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவ னையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.' என்று நல்ல மேய்ப்பனாகிய ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். அதாவது, மேய்ச்சலின் ஆடுகள் நல்ல மேய்ச்சலைக் கண்டடையும்படிக்கு, தங்களுடைய மேய்ப்பன் யார் என்று அறிந் திருக்கின்றன. அவைகள் தங்கள் மேய்பனுடைய சத்தத்தை கேட்டு அவருக்கு பின்னாக செல்கின்றன. 'வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவ னோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடி யினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோ டிப்போம் என்று ஆண்டவராகிய இயேசு உவமை வழியாக நல்ல மேய்ப்பன் யார் என்றும், அவரைப் பின்பற்றும் ஆடுகள் எப்படியாக இருக்கும் என்றும் கூறியிருக்கின்றார். எனவே நாம் நல்ல மேய்ச்சலை கண்டடையும்படி, மேய்பனுடைய சத்தம் இன்னதென்று அறிந்து அவரை பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தின் அந்நிய சத்தங்களை கேட்கும் போது, அதற்கு செவி கொடுக்காமல் இருக்க வேண்டும். அப்பொழுது: 'கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண் டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்' என்று உண்மை மனதோடு அறிக்கை செய்ய முடியும்.

ஜெபம்:

பரலோக தேவனே, அந்நிய சத்தங்களை கேட்டு அந்த சத்தங் களை பின்பற்றி அழிந்து போகாதபடிக்கு, உம்முடைய சத்தததை கேட்டு, அதற்கு செவிசாய்த்து உம்மை பின்பற்றி செல்ல எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 2:22