தியானம் (ஐப்பசி 27, 2025)
ஏன் சிலவேளைகளிலே பதில் இல்லை
ஏசாயா 1:19
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
'ஏன் எங்களுடைய சத்தத்திற்கு பதில் கொடுக்காமல் இருக்கின்றார்' போன்ற சத்தங்கள் சில வேளைகளிலே, சில விசுவாசிகளின் வாழ் விலே தொனிப்பதுண்டு. ஆனால், அன்புள்ள பிதாவாகிய தேவனோ, தாம் தெரிந்து கொண்ட தன்னுடைய ஜனங்களை, தாம் நேசிக்கும் தம் முடைய பிள்ளைகளை நோக்கி: 'வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு. கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித் தேன்; அவர்களோ எனக்கு விரோத மாய்க் கலகம்பண்ணினார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லா மலும், என் ஜனம் உணர்வில்லா மலும் இருக்கிறது என்கிறார்.' திரளான ஸ்தோத்திர பலிகளை உதடு களினாலே ஏறெடுக்கின்றார்கள் ஆனால் அவர்கள் இருதமோ தேவ னுக்கு தூரமாக இருக்கின்றது. விசேஷ பண்டிகைகளின் நாட்களை ஏற்படுத்தி, தாரளமாக காணிக்கைகளை கொடுத்து, ஓய்வு நாட்களிலே சபையிNலு கூடி வருகின்றார்கள். 'நீங்கள் உங்கள் கைகளை விரித்தா லும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்;. உங்கள் பாவங்கள் சிவேரென்றி ருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர் கள்.' என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். பிரியமான சகோ தர சகோதரிகளே, பிதாவாகிய தேவன்தாமே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கின்றார். இந்த உலகத்தில் தகப்பன் மார், தங்கள் பிள்ளை களின் தேவைகளை அறிந்து, பிள்ளைகள் அதை கேட்க முன்னதாகவே அவர்களுக்கு கொடுகின்றார்கள். அப்படியானால், உண்மையாய் தம்மு டைய பிள்ளைகளை நேசிக்கின்ற பரம பிதா, உங்களை விசாரி க்கின்றவராய் இருக்கின்றார். நீங்கள் அவருடைய சத்த்திற்கு அறிந்து கொள்ளுங்கள். அவர் பேசும்போது அவருடைய சத்த்திற்கு செவி கொடுங்கள். அப்பொழுது உங்கள் மனதிலே சமாதானம் தங்கும். அவர் உங்கள் வேண்டுதல்களை கேட்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். எனவே, தேவனைக் குறித்து குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவரவர் தன் தன் வழிகளை ஆராய்ந்து அறிந்து, வேதனை உண்டாக்கும் வழிகள் இருந்தால் அவைகளை விட்டு விலகி கர்த்தரிடத்தில் திருப்ப வேண்டும்.
ஜெபம்:
என்னை வழிநடத்தும் தேவனே, என் வாயிலிருந்து முறுமுறுப்பையும் தர்க்கிப்பையும் நீக்கி, உம்முடைய சத்தத்தை கேட்டு, அதன்படி வாழ்கின்ற ஒரு நல்ல விசுவாசியாக இருக்க எனக்கு கற்றுதந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 100:3