தியானம் (ஐப்பசி 26, 2025)
கர்த்தர் ஒருபோதும் கைவிடமாட்டார்
உபாகமம் 31:8
அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
ஒரு சமயம், 'பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களு டைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இரு ந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்ப டிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார் க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப் படியே கெட்டுப்போவீர்கள். சீலோ வாமிலே கோபுரம் விழுந்து பதினெ ட்டுப்பேரைக் கொன்றதே. எருச லேமில் குடியிருக்கிற மனுஷரெல் லாரிலும் அவர்கள் குற்றவாளிகளா யிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களு க்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.' இந்த பூமியிலே நடக்கும் பற்பல சம்பவங்களை கண்டு, சில வேளைகளிலே விசுவாசிகளும் குழப்படைந்து சோர்ந்து போய் விடுகின்றார்கள். உலகிலே நடக்கும் எல்லாக் காரியங்களுக்கும் காரணங்களை தேடுகின்றவர்கள், தேவன் பேரிலுள்ள விசுவாசத்தைவிட்டு வழுது, பயமும் சந்தேகமுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். நாம் தரிசித்து நடப்பவர்கள் அல்ல மாறாக விசுவாசித்து நடக்கின்றோம். கர்த்தர் நம்மை கைவிடுவதுமில்லை, மறந்து போவதுமில்லை. இது பொய்யுரையாத தேவனாகிய கர்த்த ருடைய வாக்குத்தத்தம். எனவே, நாம் வாழ்தாலும், மரித்துப் போனா லும், நாம் அவருடையவர்கள் என்பதே நமக்கு உறுதியான விசுவாசம். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. வெளிப்படாத மறைபொருள் ஒன்று மில்லை. மனந்திருப்பி, ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்கின்ற வர்களுக்கு இந்த உலகத்திலே மரணம் இல்லை என்று தேவன் ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக, மனந்திரும்பி, ஆண்டவர் இயே சுவை ஏற்றுக் கொள்கின்றவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவருடைய வாக்குத்தத்தம். எனவே, அவருடைய வாக்குத்த த்தை பற்றிக் கொண்டு, மனஉறுதியுடன் அவரை கிட்டிச் சேருங்கள். உண்மை மனதோடு தம்மண்டை சேருகிக்னறவர்களுடைய ஜெபத்தை கேட்கின்றார். தாழ்மையுள்ள மனதையுடையவரடகளுக்கு அதிக கிரு பையை பொழிகின்றார்.
ஜெபம்:
வாக்குமாறாத தேவனே, நான் சோர்ந்து போகும் போது, நீர் நன்மை செய்கின்றவர் என்பதிலே நான் உறுதியாய் நிலைத்திருக்கும்படி எனக்கு பெலன் தந்து, உம்முடைய வழியிலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 கொரி 15:19