புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2025)

நானோ என் கர்த்தரை நம்பியிருக்கின்றேன்

சங்கீதம் 31:14

நானோ கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.


இந்த உலகத்திலே நீடித்த ஆயுசுள்ளவர்களாக பெயரும் புகழுடனும் வாழ்ந்து, முதிர்வயதும், நரைமயிருடனும் மரித்து, ஆடம்பரமான அடக்க ஆராதனையுடன் கடந்து செல்கின்றவர்கள் யாவரும் பரிசுத்தவான்கள் என்று கூற முடியாது. அதே போல, இளவயதிலே மரித்துப் போகின்ற வர்கள் யாவரும் பாவிகள் என்றும் பொருளல்ல. அநேக ஆண்டு காலமாக வாழ்ந்து, தேவனுடைய நீடிய பொறுமையையும் இரக்கத் தையும் அசட்பை பண்ணி, செல் வம், சுகம், பெயர் புகழுடன் வாழ் ந்து, 'தங்கள் வீடுகள் நித்தியகா லமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள் ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நில ங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை. அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். சில வேளைகளிலே, தங்கள் சரீரத்தை சில ஆண்டுகள் கூட பேணிப் பாதுகாக்க வழியில்லாத நீதிமான்கள், காலத் திற்கு முன் மரித்துப்போனலும், அவன் அவன் ஆத்துமா அழிவைக் காண்பதில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, ஒருவருக்காக ஒரு வரம் மன உருகத்தோடு ஜெபிக்க வேண்டும் என்பது வேதம் நமக்கு கூறும் ஆலோசனை. சில வேளைகளிலே, அதின் பலனை, நாம்இந்த உலகத்திலே இப்போது காணமுடியாமல் இருக்கலாம். அதனால் சோர் ந்து போய்விடாதிருங்கள். சிலருக்காக நாம் கருத்தோடு, இரவு பகலாக ஜெபித்தாலும், சுகத்தை காணமல், அவர்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து போகலாம். அதனால், ஜெபத்திலே சோர்ந்து போய்விடாதி ருங்கள். பரம பிதா யாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவர் நன் மையே செய்கின்றார் என்ற சத்தியதிலே மாற்றுக் கருத்தில்லா தவர் களாக, விசுவாசத்திலே நிலைத்திருக்க வேண்டும். இந்த உலக வாழ் க்கை நித்தியமானது அல்ல. ஒருநாள் யாவரும் கடந்து செல்ல வேண் டும். சிலர் முந்திக் கொள்வதினால், தேவன் அவர்களை கைவிட்டு விட்டார் என்று எண்ணங் கொள்ளாதிருங்கள். எக்காலமும் தேவனுடைய கரத்திற்கு உட்பட்டிருக்கின்றது. எனவே சோர்ந்து போகாமல், இடை விடாமல் ஜெபம் செய்யுங்கள். கர்த்தர் நிச்சயம் பலனனிப்பார்!

ஜெபம்:

என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்டு, என்னை ஏற்றுக்கொள்ளும் தேவனே, நான் சோர்ந்து போகமல்? விசுவாசத்திலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 49:15