புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2025)

நீதிமானின் ஊக்கமாக ஜெபம்

சங்கீதம் 34:15

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.


ஒரு மனிதனாவன் ஒரு பாத்திரத்திலே தெளிந்த நல்ல தண்ணீரை வைத்திருந்தான். அந்த பாத்திரத்திற்குள் ஒரு சிறு துளி விஷம் விழுந்து விட்டடால், அந்த தண்ணீரை நல்ல தண்ணீர் என்று கூறுவீர்களா? அல்லது அந்தத் தண்ணீரிலே விஷம் கலக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுவீர்களா? அந்த தண்ணீர் எந்த பாவனைக்கும் உபயோகமற்றதாக இருக்கும். அதற்கொத்ததாகவே, ஒரு விசுவாசியினுடைய மனதிலே ஏற்படும் கசப்பை நாம் சம்பந்த ப்பட்டவர்களோடு அறிக்கை செய்து ஒப்புரவாக்காவிட்டால், அந்த விசு வாசியின் மனதிலே கசப்பு குடி கொண்டு விடும். அத்த மனதை சுத் தமானது என்று கூற முடியுமா? இப்படிப்படிப்பட்ட வாழ்க்கை முறை நீதிமானுக்கு ஏற்புடையதாகுமா? ஒருவேளை ஒ ருவிசுவாசியானவன், இப்படியாக தன் மனதிலே கசப்பை வைத்துக் கொண்டு, தன்னை நீதிமான் என்று கூறிக் கொண்டால், தேவ சமுகத்திலே அது பிரியமான ஜெமாக இருக்குமோ? எனவே, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்ய முன்னதாக, தேவ பிள்ளைகள் தங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை அறிக்கை செய்து, தேவ வார்த்தையின்படி விட்டுவிட வேண்டும். சில வேளைகளிலே சில விசுவாசிகள் தங்கள் மனதிலே குறிப்பிட்ட விசுவாசியோடு நல்லிண க்கத்தோடு வாழாமல், அந்த விசுவாசி சுகமடைய வேண்டும் என்று ஜெபிப்பதுண்டு. இந்த ஜெபத்தை ஊக்கமான ஜெபம் என்று கூறிக் கொள்ள கூடுமோ? தனக்கெதிராக குற்றம் செய்த விசுவாசிக்கு இரக் கத்தை காண்பிக்க மனதில்லை ஆனால் ஆண்டவரே அவனுக்கு இரங்கும் என்று வேண்டுதல் செய்து கொள்கின்றார்கள். 'நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.' கர்த்தர் நீதிமான் களின் ஜெபத்தை கேட்கின்றார். 'கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடு தலுக்குத் திறந்திருக்கிறது.' எனவே நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. கர்த்தருக்கு பிரியமான வர்களாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் பெலவீனங்களிலே உதவி செய்ய ஆவியானவர் ஆயத்தமுள்ளவராக இருக்கின்றார். ஒப்புரவாகு ங்கள். அப்பொழுது உங்கள் ஜெபம் கர்த்தருக்கு பிரிமுள்ளதாக இரு க்கும்.

ஜெபம்:

இரகத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உமக்கு வேதனையு ண்டாக்கும் வழிகளை விட்டு, உண்மையுள்ள இருதயத்தோடு ஊக்கமாக ஜெபம் செய்யும்படிக்கு, எனக்கு பெலன் தந்த வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 59:2