தியானம் (ஐப்பசி 23, 2025)
விசுவாசமுள்ள ஜெபம்
யாக்கோபு 5:15
அப்பொழுது விசுவாசமு ள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்;
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருந்தது. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். ஆண்டவராகிய இயேசு அவனை தம் வார்த்தையால் சொஸ்தமாக்கினார். அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். வேறொரு சமயத்திலே, அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்ற வர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான் என்றார். கருப்பொரு ளாவது, சில மனிதர்களுடைய வியாதிகள் அவர்களுடைய பாவமான வாழ்க்கையினாலே அவர்களை பிடித்துக் கொள்கின்றது. ஆனால், எல்லோருடைய பெலவீனங்களும் அவர்களுடைய பாவ சாபங்களினாலே உண்டாகுவதில்லை. வியாதிஸ்தர்களுக்காக ஜெபிக்கும் போது, தேவ னுடைய வார்த்தையின்படி ஜெபம் செய்யுங்கள். 'உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக் அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவஞ்செய் தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.' என்று யாக்கோபு 5:13-15 வசனங்களிலே வாசிக்கின்றோம். தேவ வார்த் தையை பின்பற்ற விரும்பினால், தேவன் அமைத்த சபையின் ஒழுங்கு முறையை நீங்கள் பின்பற்றுங்கள். கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் தேவ வார்த் தைக்கு கீழ்படியும் போது, அதனால் நீங்கள் உங்கள் மனத்தாழ் மையையும, தேவ வார்த்தையிலுள்ள விசுவாசத்தை கிரியையினாலே வெளிப்படுத்துகின்றீர்கள். அப்பொழுது தேவ வார்த்தையினால் உங்க ளுக்கு விடுதலை உண்டாகும்.
ஜெபம்:
வார்த்தையை அனுப்பி குணமாக்குகின்ற தேவனே, என்னை எதிர்நோக்கும் கடினமான சூழ்நிலைகளிலும் உம்முடைய வார்த்தைக்கு நான் கீழ்படிந்து நடக்க நீர் எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கொலோ 3:13