புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2025)

தேவனிடத்தில் பெற்றுக் கொண்டவைகள்

1 யோவான் 2:17

உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தன் படிப்பை முடித்து, பின்பு, வேலை தேடி திரிந்தான். அடுத்து ஊருக்கு சென்று வேலை பார்க்கும்படி முயற்சிகள் எடுத்த போது, அதைக் குறித்து பல தடைகள் உண்டாயிருந்தது. அவனுடைய பெற்றோர் வழியாக, அந்த ஊருக்கு செல்வது தேவ சித்தம் இல்லை என்று அவனுக்கு வெளிப்படு த்த ப்பட்டது. பின்பு அவன் தான் வசித்த ஊரின் மற்றப் பகுதியிலே, ஒரு வேலையை செய்து வந்தான். அவ னுடைய வேலை மிகவும் தொலை வில் இருந்ததால், இரயிலில் சென்று வருவது, அநேக மணித்தி யாலங்களை எடுத்ததால், அவன் தினமும் இளைப்படைந்தவனாகவும், தன்னுடை வீட்டு அலுவல்களை செய் வதற்கு நேரமற்றவனாகவும் இருந்தான். அதனால், அவன் தன் பெற்றோரோடு சேர்ந்து தங்கள் குடும்ப ஜெபத்திலே ஒரு மோட்டார் சைக்கிள் தேவை என்று, தேவனிடத்திலே விண்ணப்பம் பண்ணினான். சில மாதத்திற்குள், அதிசய விதமாக, அவனுடைய கம்பனியினால், அவனுக்கு ஒரு வாகனத்தை வாங்கிக் கொடுத்தார்கள். அவன் மிகவும் சந்தோஷமடைந்து, சபையிலே சாட்சி பகர்ந்தான். அதை கேட்ட யாவரும் தேவனை துதித்தார்கள். மாதங்கள் கடந்து சென்றதும், அவன் தன் நண்பர்களில் ஒருனோடு சேர்ந்து, எந்த ஊருக்கு தேவன் போகாதே என்று சொன்னாரே, அந்த ஊருக்கு சென்று, நண்பனோடு சேர்ந்து, நாட்களை உல்லாசமாக களித்து வீடு திரும்பினான். அந்த வாகனத்தை தேவன் அவனுக்கு கொடுத்ததால், அவன் செல்லும் இடங்கள் எல்லாம் தேவனுக்கு சித்தமானது என்று கூறிக் கொள்ள முடியுமோ? தேவன் என் மனவிருப்பதை நிறைவேற்றினார் என்று அவன் சாட்சி பகர கூடுமோ? பிரியமான தேவ பிள்ளைகளே, இவ்வண் ணமாகவே, தேவனாகிய கர்த்தர் தாமே, ஒரு விசுவாசி வாழும்படி கொடுத்த வீடு, நமக்கு கொடுகப்ட்ட பொருட்களும் இருக்கின்றது. அங்கே தேவனுடைய சித்த்திற்கு விரோதமாக செயல்கள் நடை பெறுவதும், நடைபெறாமலிருப்பதுதையும் குறித்த தீர்மானம் அந்த விசுவாசியின் தீர்மானமாக இருக்கின்றது. எனவே, நீங்கள் தேவனிட த்திலிருந்து வேண்டி பெற்றுக் கொண்டவைகளை, தேவ சித்தமானது உங்களில் நிறைவேறும்படிக்கு தேவ ஆவியானவரின் வழிநட த்துத லோடு பயன்படுத்துங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த, மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும்இ ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளை நான் பற்றிக் கொள்ளாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 6:68