தியானம் (ஐப்பசி 21, 2025)
பெற்ற நன்மைகள் எதற்கு?
கலாத்தியர் 5:24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
சமஸ்த இஸ்ரவேலின் ராஜ்யபாரம் தாவீதின் குமாரனாகிய சாலொமோனிடத்திற்கு கொடுக்கப்பட்டபோது, அவன் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காத தும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியே னுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; என்று வேண்டுதல் செய்தான். அந்த விண்ணப்பம் கர்த்தருடைய பார்வை யிலே பிரியமாக இருந்தது. ஆதலால் கர்த்தர், அவனை நோ க்கி: நீ உனக்கு நீடித்த நாட் களைக் கேளாமலும், ஐசுவரிய த்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞான த்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை என்று அவனை ஆசீர்வதிதார். அதனால், அவன் அந்நிய தேவர்களை வழிபடும் ஸதிரிகளை தனக்கு மனைவிகளாக ஏற்படுத்திக் கொண்டது, தேவன் அனுமத்தித்த காரியமா? முந்நூறு மனைவிகளையும், எழு நூறு மறுமணவாட்டிகளையும் தனக்கென ஏற்ப டுத்திக் கொண்டது தேவனுடைய ஆசீர்வாதம் என்று கூற முடியுமோ? இல்லை. தேவ ஆசீர்வாதமானது, தேவனுடைய கற்பனைகளுக்கும் கட் டளைகளுக்கும் உட்பட்டதாகவே இருக்கும். அவர் தமக்கு வார்த்தைக்கு விரோதமாக எதையும் செய்பவர் அல்லர். அதுபோலவே, நாம் வேண் டிக் கொண்ட பிரகாரம் தேவன் எங்களுக்கு பொருளாதார விருத்தியை கொடுத்திருக்கின்றார் என்று ஒரு விசுவாசி சாட்சியாக கூறிக் கொண் டான். அதனால், அவன் தனக்கு கிடைத்த பொருளாதரத்தை தன் இஷ; டப்படி, தன் ஆசைகளை நிறைவேற்றும்படி செலவு செய்து கொண்டு, அதை தேவன் செய்தார் என்று கூற முடியாது. தேவனுடைய ஆசீர் வாதம் நம் ஆசை இச்சைகளை நிறைவேற்றும்படி கொடுக்கப்படு வதி ல்லை. தேவனானவர் நமக்கு நன்மைகளை ஈந்திருந்தால், அவைகளை நன்மைக்கேதுவாக பயன்படுத்த வேண்டும்.
ஜெபம்:
நன்மையினால் என் வாயை திருப்த்தியாக்கின்ற தேவனே, என் ஆத்துமா எப்போதும் உம்மை வாஞ்சித்து, உமக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 இராஜ 3:12