புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 20, 2025)

பிரதான தேவ சித்தம்

1 யோவான் 5:14

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.


நம்முடைய ஆத்துமாக்களை பாதளத்தின் வல்லமைக்கு காத்துக் கொள்ளுக்கும்படியாகவே, பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகிற்கு அனுப்பினார். குமாரனாகிய இயேசுவே, எந்த ஒரு மனிதனும் பெற்றுக் கொள்ளக்கூடிய அதி உச்சிதமான நன்மையாக இருக்கின்றார். அதி உச்சிதமான நன்மையை நமக்காக கொடுத்தவர், வேறு எந்த நன்மைகளையும் நமக்கு மறைத்து வைக்க மட்டார். ஆனால், இன்று தேவனுடைய பிள்ளைகள், சில வேளைகளிலே தாங்கள் வேண்டிக் கொள் வது இன்னதென்று அறியாதிருக்கி ன்றார்கள். தேவனுடைய பிரதான மான அழைப்பின் நோக்கம் நித்திய ஜீவன். அந்த பிரதானமான நோக்கத்தை மறந்து, பற்பல ஆசைகளால் இழுப்புண்டு, அவைகளை பெற்றுக் கொள்ளும்படி நாடித் தேடுகின்றார்கள். ஆதியிலே, ஆதாம், ஏவாளுக்கு மகிமையான வாழ்வை கொடுத்து, தீமையானது என்ன என்று அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, தீமையானதை புசிக்க வேண்டாம் என்று எச்சரிப்பைக் கொடுத்தார். அதனால், நாம் யாவரும் வழிதப்பிப்போனாம். தேவ கிருபையினாலே, ஆண்டவராகிய இயேசு வழியாக நாம் கண்டு பிடிக்கப்பட்டு, நித்திய ஜீவனிக் வழியாக அவரிலே சார்ந்திருக்கும் பாக்கியத்தைப் பெற்றுருக் கின்றோம். எப்படி, ஆதாம் ஏவாளுக்கு எச்சரிப்பு வழங்கப்பட்டதோ, அதே பிரகாரமாக, நாம் தீமையானதை நாடித் தேடாதபடிக்கு எச்சரிப்பைப் பெற்றிருக்கின்றோம். ஆதியிலே அவர்கள் தங்கள் சொந்த சுயாதீனத்தின்படி எப்படி கீழ்படியானமற் போனார்களோ அப்படியாக நாமும் கீழ்படியாமல் போகும்படிக்கு சுயாதீனமுள்ளவர்களாக இருக் கின்றோம். எனவே, நித்திய ஜீவனை தரும்படி வந்த ஆண்டவராகிய இயேசு, ஆத்துமாகவக்கு கேடு விளைவிக்கக்கூடிய தீமையானவை களை நமக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ஆனால், நமக்கு கொடுக்கபட்ட சுயாதீனத்தை தீமையானதை நடப்பிக்க நாம் பயன்படு த்துவோமாக இருந்தால், நாம் மறுபடிம் வழிதப்பிப் போய் விடுவோம். எனவே, நாம் எதை நாடித் தேடுகின்றோம், எதை தேவனிடத்திலே கேட் டுக் கொள்கின்றோம் என்பதை குறித்து உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் நித்திய ஜீவனை அடைவதே தேவ சித்தம். அதற்கு விரோதமான காரியங்களை குறித்து வேண்டுதல் செய்யாதிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் எனக்கு கொடுத்த சுயாதீனத்தை நான் என் துர்குணத்தை நிறைவேற்றுவதற்கு சாதகமாக பயன்படுத்தி, என் வழி களை நான் நியாயப்படுத்ததாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:16