புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2025)

யாருக்கு எப்போது கனி கொடுக்க வேண்டும்

பிலிப்பியர் 2:15

கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளை களுமாயிருக்கும்படிக்கு,


நாம் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும், அந்த காத்திருப்பின் காலத்திலே, நாம் பெற்ற நற்செய்தியை எப்படி, எப்போது மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதைக் குறித்து, கடந்து இரண்டு வாரங்களாக தியா னித்து வருகின்றோம். அந்த தியானங்களை கருத்தோடு தியானித்தி ருந்தால், 'பரிசுத்தமானதை நாய்க ளுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாN தயுங்கள்; போட்டால் தங்கள் கால் களால் அவைகளை மிதித்து, திரும் பிக்கொண்டு உங்களைப் பீறிப் போடும்.' என்பதின் பொருளை நன் றாக அறிந்திருப்பீர்கள். ஒவ்வொ ன் றிற்கும் ஏற்ற காலம் ஒன்று உண்டு. அதை அறிந்து நாம் செயற்பட வேண்டும். ஆனால், கிறிஸ்தவனாக வாழ்வது எக்காலத்திற்கும் உரியது. இந்த உலகத்திலே பாவிகள், துன்மார்க்கர், பரியாசக்காரர் மத்தியிலே வாழ்ந்து வருகின்றோம். அவர்கள் முன்னிலையிலும் நாம் தேவன் விரும்பும் கனிகளை காண்பிக்க வேண்டும். நற்செய்தியை அறிவிப்ப தற்கும், ஒருவேளை சபைக்கு அழைப்பதற்கும் காலம் ஏற்றதாக இருக்கவிட்டாலும், அவர்கள் கடும்போக்க நடவடிக்கைகள் மத்தியிலும், கிறிஸ்துவின் சாயல் நம்மிலே வெளிப்பட வேண்டும். சுவையான கனிகொடுக்கும் மாமரமானது, தன்னண்டை வரும் மனிதர்ககிள் சுபாவங் களை அறிந்து வௌ;வேறுவிதமான கனிகளை கொடுப்பதில்லை. அந்த மரமானது எப்போதும், யாவருக்கும் சுவையான கனிகளையே கொடுக்கும். அதுபோலவே, நம்முடைய வாழ்க்கை முறையானது மற்ற வர்களுக்கு முன்பாக எப்போதும் நற்செய்தியாகவே இருக்க வேண்டும். அந்த வாழ்க்கை முறை ஒரு நாளிலே உருவாகப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் நாம் வளர்ந்து பெருக வேண்டும். சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் எப்போதும் நம்மில் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் வருகைக்காக ஆயத்தமாக இருப்பது என்பது, வானத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருப்பது என்பது பொருளல்ல என்பதை நாம் யாவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம். இரவும் பகலும் அவரு டைய வேதத்திலே தியானமாயிருந்து, அதின் காலத்திலே கனிகொடு க்கின்ற நல்ல மரத்தைப் போல நம்முடைய வாழ்க்கை காணப்பட வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை அழைத்த தேவனேஇ மழைத்தாழ் ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் நல்ல கனிகொடுக்கிற மரத்தைப் போலஇ என் வாழ்க்கையும் மாறுபடிக்கு நீர் என்னை கரம்பித்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 17:1-8