புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2025)

எப்போது ஆயத்தப்படுவது?

மத்தேயு 24:44

நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார் ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.


ஒரு ஊரிலே பல ஆண்டுகளாக நடந்து வந்த யுத்தம் காரணமாக, உள்ளூரட நிர்வாகம் சரியாக இயங்கி வராததால், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் மத்தியிலே, களவும் கொள்ளையும், களியாட்டமும், துஷ்டதனமுமான வாழ்க்கை முறையானது பெருகிக் கொண்டே சென்றது. அந்த ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு நண்பர்களுக்கு அங்கிரு ந்து தப்பித்துக் கொள்ளும் போ க்கு உண்டாயிற்று. அது எப்படி யெனில், அடுத்து ஊருக்கு செல் வதற்கான கடவுச் சீட்டும், அனுமதி பத்திரமும் அவர்களுக்கு கிடை த்தது. அதன்படிக்கு, அந்த ஊருக்கு வரவிருக்கும் சிறிய விமானமொன்றிலே அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் ஏறிக்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவர்களிலே ஒருவன், இந்த செய்தி கிடைத்த நாழிகை யிலேயே தான் வாழும் ஊரைவிட்டு செல்வதற்கு தீர்க்மான முடிவை எடுத்து, தன் குடும்பத்தனரையும் ஆயத்தப்படுத்திவிட்டான். நாளாந்தம் அவன் செய்ய அவசியமான காரியங்களை மாத்திரம் செய்து கொண்டு, தன் செவியை வரவிருக்கும் ஆகாய விமாத்தின் சத்த்திற்காக திறந்து வைத்திருந்தான். ஆனால், மற்ற நண்பனோ, ஆயத்தம் செய்யபோதும், தன் உறவிரோடும், நண்பர்களோடும் போக்கும் வரத்துமாக இரந்து வந்தான். இருக்கும் வரைக்கும் உல்லாசமாக இருப்போம் என்று எண் ணினான். ஆனால், ஒருநாள் இவன் இப்படியாக பற்பல அநாவசியமான அலுவல்களிலே தன்னை சிக்க வைத்துக் கொண்டிருந்த போது, அந்த விமானம் வந்து அவனுடைய வீட்டிற்கு அருகிலே இறங்குவதை கண்டான். ஆனால், தன் அலுவல்களை முடித்து, அவன் அந்த விமானம் தரையிறங்கின இடத்திற்கு செல்ல முன்னதாக அந்த விமானம், ஆயத்தமாக இருந்தவனை ஏற்றுக் கொண்டு பறந்து சென்று விட்டது. நித் திய வாழ்விற்காக அழைப்பைப் பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய சம்பத்திலுள்ள இரண்டு நண்பர்களில், ஆயத்தமாக இருந்தவன், எப்போது ஆயத்தப்பட்டான்? ஏன் இரண்டாவது நண்பன் இரட்சிப்பின் செய்தியை ஏற்றுக் கொண்டிருந்தும் ஏன் அதை அடை யாமற்போனான்? அழைப்பை பெற்ற நம்முடைய வாழ்க்கையிலே, இந்த உலகத்திலே தேவைகள் உண்டு அதே நேரத்திலே உலக ஆசைகளும் உண்டு. எதை நீங்கள் நிறைவேற்றப் போகின்றீர்கள்? இதை தியானித்து செயற்படுங்கள்.

ஜெபம்:

மேலானவைகளை நாடுங்கள் என்று சொன்ன தேவனே, நாட்கள் பொல்லாதவைகளானதினாலே நான் காலத்தை ஆதயப்படுத்திக் கொள்ளு ம்படிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:21