புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2025)

விழிப்புணர்வுள்ள வாழ்க்கை

மத்தேயு 25:13

மனுஷகுமாரன் வரும் நாளை யாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.


'அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன் னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ள வர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில் லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண் ணெயையோ கூடக்கொண்டுபோ கவில்லை. புத்தியுள்ளவர்கள் தங் கள் தீவட்டிகளோடுங்கூடத் தங் கள் பாத்திரங்களில் எண்ணெ யையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத்தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித் திரைமயக்கமடைந்து தூங்கிவி ட்டார்கள்.' யாவரும் கிறிஸ்வின் வருகையை எதிர்பார்த்து தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்தாhர்கள். ஆண்டுகள் கடந்து சென்றதும், களைப்பும், இளைப்பும், சோர்வும் யாவருக்கும் உண்டாயி ருந்தது. 'நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர் கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப் பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட் டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.' மணவாளன் கிறிஸ்து வருகின்றார் என்று சத்தத்தை யாவரும் கேட்டு, யாவரும் துரிதமாக எழுந்திருந்து ஆயத்தப்பட முயற்சி செய்தர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சோர்வானது, தங்கள் எஜமானனுக்காக பகல் முழுவதும் வயலிலே கடுiயாக உழை த்து, மாலையிலே உடல் சோர்வினால் அயர்ந்து போகும் சோர்வாவாக இராமல், அவர்களுடைய அஜாக்கிரதையான வாழ்க்கை முறையி னால் உண்டாயிருந்தது. அதனால் அந்த ஐந்து மணவாட்டிகளுக்கு ஆயத் தப்பட முடியவில்லை. மணவாளனாகிய கிறிஸ்து இன்னும் ஐந்து நாள் தாமத்திது வந்திருந்தாலும், அவர்கள் அந்த நிலையிலே இருக்கும் மனதுடையவர்கள். ஆனால், எந்த நிலையிலும், மற்றய ஐந்து பேர், தங்கள் நோக்கத்தை இழந்து போகவில்லை. அவர்கள் உள்ளான மனி தன் விழிப்பாகவே இருந்தது. அவர்களுடைய வாழ்க்கையானது இந்த பூவுலகத்தை விட்டு செல்ல எப்போதும் ஆயத்தமாகவே இருந்தது. ஆவிக்குரிய ஆயத்தம் அவர்கள் வாழ்விலே இருந்தது. நாமும் சில வேளைகளிலே அயர்ந்து போனாலும், கர்த்தருடைய சத்தத்தை கேட்கும் போது, உடடினயாக எழுந்து, அவருடைய சேவையை செய்ய, சுவிசேஷத்தை அறிவிக்க, பெற்ற தாலாந்துகளை உபயோக்கிக்க ப்போதும் ஆயத்தமுள்ள மனதுடையவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, புத்தியுள்ள ஐந்து கன்னிகைகளைப் போல, என்னுடைய வாழ்க்கை எப்போதும், உம்முடைய நாளுக்கென்று ஆயத்த முள்ளதாக இருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 2:7